100 கிராம் பாசிப்பயறில் 24 கிராம் புரதம் இருக்கிறது. உடல் எடை குறைக்க ஏற்ற இந்த உணவை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.
புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதை நாம் அறிவோம். பசி நேரத்தில் கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் நார்ச்சத்து மிகுதியான உணவுகளை சாப்பிடலாம். கலோரிகள் குறைந்த மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளுள் பாசிப்பயறும் ஒன்று.
இதில் புரதம் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் பாசிப்பயறில் 24 கிராம் புரதம் இருக்கிறது. உடல் எடை குறைக்க ஏற்ற இந்த உணவை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். முளைக்கட்டிய பயறு, நறுக்கிய தக்காளி, வெள்ளரி, ஆரஞ்சு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு உப்பு, சீரகம், எலுமிச்சை சாறு, யோகர்ட் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1/2 கப்
வெள்ளரி - 1 கப்
தக்காளி - 1 கப்
ஆரஞ்சு - 1 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - ஒரு மேஜைக்கரண்டி
ட்ரெஸ்ஸிங்:
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி சாறு - 1 மேஜைக்கரண்டி
யோகர்ட் - 1 மேஜைக்கரண்டி
வெள்ளரி - 1 கப்
தக்காளி - 1 கப்
ஆரஞ்சு - 1 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - ஒரு மேஜைக்கரண்டி
ட்ரெஸ்ஸிங்:
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி சாறு - 1 மேஜைக்கரண்டி
யோகர்ட் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கட்டிய பயறு மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, ஆலிவ் எண்ணெய், மிளகு, சர்க்கரை, சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வேகவைத்த பயறுடன் கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். அத்துடன் நறுக்கி வைத்த வெள்ளரி, தக்காளி, ஆரஞ்சு, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
வேகவைத்த பயறுடன் கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். அத்துடன் நறுக்கி வைத்த வெள்ளரி, தக்காளி, ஆரஞ்சு, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
இதனை முட்டைக்கோஸில் வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment