Sunday, September 22, 2019

எந்தெந்த நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?

🌟 நமது முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அவை யாதெனில் எல்லா நட்சத்திரங்களிலும், எல்லா காரியங்களையும் செய்வது என்பது உசிதமானதல்ல. சில காரியங்களுக்கு இந்த நட்சத்திரங்கள் மட்டுமே உகந்தது என்று நம் முன்னோர்கள் பகுத்து அதை நமக்கு அளித்தும் சென்றுள்ளனர்.
🌟 எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன்பாக அன்றைய தினத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து, நாம் செய்யும் காரியத்திற்கு இந்த நட்சத்திரம் ஏதாவது ஒரு வகையில் ஆதரவாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்து செய்வது, செய்ய நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த பலன்களை நாம் அடைய உதவும்.

🌟 அந்த வகையில் இன்று நாம் எந்தெந்த நட்சத்திரத்தன்று என்னென்ன காரியங்களை செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கதிரறுக்க உகந்த நட்சத்திரங்கள் :
🌟 கதிரறுக்க உகந்த நட்சத்திரங்கள் என்று நம் முன்னோர்கள் ஒரு சில நட்சத்திரங்களை வகுத்துள்ளனர்.
அவைகள் பின்வருமாறு,
🌟 பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கதிரறுக்க உகந்த நட்சத்திரங்களாகும்.
கிரக ஆரம்பம் (பூமி பூஜை) செய்ய உகந்த நட்சத்திரங்கள் :
🌟 கிரக ஆரம்பம் (பூமி பூஜை) செய்ய உகந்த நட்சத்திரங்கள் என்று நம் முன்னோர்கள் ஒரு சில நட்சத்திரங்களை வகுத்துள்ளனர்.
அவைகள் பின்வருமாறு,
🌟 ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், சுவாதி, திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கிரக ஆரம்பம் (பூமி பூஜை) செய்ய உகந்த நட்சத்திரங்களாகும்.
தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க உகந்த நட்சத்திரங்கள் :
🌟 தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க உகந்த நட்சத்திரங்கள் என்று நம் முன்னோர்கள் ஒரு சில நட்சத்திரங்களை வகுத்துள்ளனர்.
அவைகள் பின்வருமாறு,
🌟 பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க உகந்த நட்சத்திரங்களாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...