ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பா.ஜ., தலைவரான, தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கேரளா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு, புதிய கவர்னர்களை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், நான்கு பேர் முதல் முறையாக கவர்னர்களாக பதவியேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் முதல் ஆட்சியின்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராக பணியாற்றிய, கல்ராஜ் மிஸ்ரா, 78, ராஜஸ்தான் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாய்ப்பில்லை:
இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, 75 வயதை தாண்டியதால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஹிமாச்சல் பிரதேச கவர்னராக, இந்தாண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். தற்போது, ராஜஸ்தான் கவர்னராக மாற்றப்பட்டு உள்ளார். பா.ஜ., மூத்த தலைவரான, கல்யாண் சிங், இதுவரை ராஜஸ்தான் கவர்னராக இருந்தார்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் வென்ற, பா.ஜ., மூத்த தலைவரான, பகத் சிங் கோஷியாரிக்கும், 77, இந்தாண்டு நடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் நீண்ட காலம் இருந்த இவர், பா.ஜ.,வின் தேசிய துணைத் தலைவராகவும், உத்தரகண்ட் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர், மஹாராஷ்டிர மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.வித்யாசாகர், இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
மற்றொரு, பா.ஜ., மூத்த தலைவரான, பண்டாரு தத்தாத்ரேயா, 72, ஹிமாச்சலப் பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மோடியின் முதல் அமைச்சரவையில், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக பணியாற்றியவர், பண்டாரு தத்தாத்ரேயா. 2017ல் திடீரென நீக்கப்பட்டார். இந்தாண்டு தேர்தலிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதை சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர், வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.
காங்., மூத்த தலைவராக இருந்த, ஆரிப் முகமது கான், 68, கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர், ராஜிவ் அமைச்சரவையில் இவர் இடம்பெற்றிருந்தார்.

இணைந்தார்:
ஷா பானு வழக்கில், விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளித்து, உச்ச நீதிமன்றம், 1986ல் தீர்ப்பு அளித்தது. அதை ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டதை எதிர்த்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். பின், பா.ஜ.,வில் இணைந்தார். முத்தலாக் தடை மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்தவர். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான, பி.சதாசிவம், தற்போது, கேரளா கவர்னராக உள்ளார்.
கவர்னர்கள் நியமனத்தில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், தமிழக, பா.ஜ., தலைவரான, தமிழிசை சவுந்தரராஜன், 58, தெலுங்கானா மாநில கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த, 2014 ஆகஸ்டில், தமிழக, பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட அவர், காங்., மூத்த தலைவர், குமரி அனந்தனின் மகள். மேலும், இவருடைய சித்தப்பாவான, எச்.வசந்தகுமார், காங்., - எம்.பி.,யாக உள்ளார். காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரான தமிழிசை, தமிழகத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபட்டவர். டாக்டரான இவர், இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார்.
தற்போது, தெலுங்கானாவின் கவர்னராக, இ.எஸ்.எல்.நரசிம்மன் உள்ளார். முந்தைய, காங்., அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் இவர் மட்டுமே, தொடர்ந்து கவர்னராக பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, தமிழிசை நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:
Post a Comment