1996ல் மோசடி செய்த ஊழியர் 2019ல் 'டிஸ்மிஸ்'
பெரம்பலுார், போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்தது அம்பலமானதால் -ஓய்வு பெற ஒரு மாதம் இருக்கும் நிலையில் யூனியன் அலுவலக மேலாளரை 'டிஸ்மிஸ்' செய்து அரியலுார் கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.
அரியலுார் சிறுகளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் 58 இவர் 1988ம் ஆண்டு எட்டாம் வகுப்பு தகுதியில் மருதுார் கிராம ஊராட்சி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.
பின் 1996ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து யூனியன் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
தற்போது அரியலுார் யூனியன் அலுவலகத்தில் மேலாளராக இருந்தார்.இந்நிலையில் அவர் கொடுத்த மதிப்பெண் சான்றிதழ் போலி என சென்னை கல்வித்துறை சான்றிதழ் அளித்தது.
இதையடுத்து அன்பழகனை பணிநீக்கம் செய்து அரியலுார் கலெக்டர் வினய் நேற்று உத்தரவிட்டார்.
அன்பழகன் அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்தார்.
No comments:
Post a Comment