Friday, September 20, 2019

ரிசர்வ்_வங்கி_கவர்னர் .. #சக்திகாந்த_தாஸ் ...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை கவனத்தில் கொண்டே நிதிக்கொள்கை வகுக்கப்படுகிறது.
இதில், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமாகியுள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் யாருமே எதிர்பாராத வகையில் குறைந்து வருகிறது.
இதனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
பொருளாதார சுணக்கம் தொடர்ந்தால் வங்கி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அனைவருக்கும் எளிதாக பணம் கிடைக்கச் செய்வதன் மூலம், அதாவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப்போதைய நிலையைச் சமாளித்துவிட முடியும்.
இதற்காக பட்ஜெட்டில் அறிவித்த செலவுகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.
சிக்கன நடவடிக்கை, வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதைக்கு மேற்கொள்ளக் கூடாது.
அடிப்படைக் கட்டமைப்புரீதியாக நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது.
சர்வதேச அளவில் இப்போது பெரிய அளவில் பொருளாதார சுணக்கமில்லை.
எனவே, நமது பொருளாதாரம் தற்காலிக சுணக்கத்தில் இருந்து மீளும் ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...