தலைபாரம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைகளுக்கு வெற்றிலை
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
* வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
* ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
* வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.
* வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.
வெற்றிலையை தினமும் மென்று தின்பதால் வயிற்றில் வாய்வுக்கோளாறு ஏற்படாது. அதோடு வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்ற உபாதைகள் தடுக்கப்படும். அதுமட்டுமின்றி கழிவுகள் வயிற்றில் சேராமல் குடல் சுத்தப்படுத்தப்படுவதோடு, மலச்சிக்கல் ஏற்படாது.
தலைபாரம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைகளுக்கு வெற்றிலை சாற்றை உட்கொண்டால் அனைத்தும் பறந்துவிடும்
நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால், வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வந்தால் நிவாரணம் அளிக்கும்
* வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.
தேள் கடித்துவிட்டால் பயப்பட வேண்டாம். உடனே இரண்டு வெற்றிலைகளுடன் ஒன்பது மிளகுகள் சேர்த்து மென்று சாப்பிட்டால் தேள்கடி விஷம் முறிந்துவிடும்.
உடலில் அரிப்பு, ஊறல், திடீர் வீக்கம் ஆகிய பிரச்சனையா? இதற்கும் வெற்றிலையால் தீர்வு உண்டு. வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிடுங்கள். உடனே பலன் கிடைக்கும்.
சொரி, சிரங்கு போன்ற நாள்பட்ட புண்களுக்கு 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலைகள் சேர்த்துக் காய்ச்சி தினமும் காலை - மாலை வேளைகளில் புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்.
No comments:
Post a Comment