Monday, September 2, 2019

வாய் துர்நாற்றத்தால் அவதி படுறீங்களா? அதை போக்க இதோ ஈஸியான டிப்ஸ்!


நம்மில் சிலருக்கு உடலில் ஏற்படும் அதிக வியர்வை, கேஷ், வாய்த்துறுநாற்றம் போன்ற பிரச்சனைகளால் பல நேரங்களில் பல இடங்களில் மற்றவர்களுடன் இருக்கும் போது சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம். அந்த வகையில் வாயில் இருந்து வரும் துரு நாற்றத்தை எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் வாய்த்துறுநாற்றம் வர பல காரணங்கள் உண்டு. சரியாக பல் விலக்காமல் இருப்பது, செரிமான கோளாறு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவது, வாயில் ஏற்படும் கிருமி தொற்று, புகையிலை, அசைவ உணவு போன்றவற்றினால் கூட வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.
இதனை எப்படி சரிசெய்வது? வாங்க பாக்கலாம். புதினா இலைகளை மென்று தின்பதால் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு வாய் துர்நாற்றம் குறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சனை எளிதில் சரியாகும்.
காலை எழுந்ததும் டீ, காபி போன்றவற்றிற்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது நன்மை தரும். மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை பல்துலக்குவது, பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது, பல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது, இயற்கையாக விளைந்த காய்கறிகளை உண்பது போன்றவற்றின் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யமுடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...