எங்க ஊரில் வேலைன்னு வந்துட்டா அம்பானியாக இருந்தாலும் சரி அமெரிக்க கம்பெனியாக இருந்தாலும் சரி % வெட்டாம எதுவும் நடக்காது. "சிவாஜி" படம் தான் நினைவுக்கு வருகிறது.
மகாபலிபுரம் சாலையில் கட்டிடம் கட்ட அமெரிக்க கம்பெனியிடமே சுமார் (2 மில்லியன் டாலர்) 15 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கி கிட்டுதான் கட்டுமான அனுமதிகளை 2014 அதிமுக அரசு அளித்துள்ளது. ஜெயாவுக்கு தெரியாம இது நடந்தருக்கு? ஆனால்.. இப்போது அந்தம்மா இறந்தவிட்டார்கள்.
ஆனால் அமெரிக்காவில் இருக்கறவன் இந்த ஊழலை நோண்ட ஆரம்பிச்சு இந்த வருடம் தீர்ப்பும் வந்து விட்டது. லஞ்சம் கொடுத்த கம்பெனிக்கு கிட்டத்தட்ட 170 கோடி ரூபாய்கள் அபராதமும் மேலும் சுமார் 500 கோடி ரூபாய்கள் கோர்ட் செலவுகளாகவும் அளிக்கச் சொல்லி விட்டார்கள்.
தீர்ப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும். லஞ்சம் கொடுத்ததை போன்று 100 மடங்கு பைன். அப்படித்தான் இருக்கணும்.
இப்ப அடுத்து இந்த ஊழலை கையாண்டதற்காக அந்த Cognizant இந்திய தலைமை அதிகாரிக்கு தனிப்பட்ட முறையில் 3 கோடி அபராதம். வேலை வேறு போச்சு.
ஆனா பாருங்க...இன்றுவரை இந்த ஊழலில் பணம் கேட்டு வாங்கிய தமிழக அதிகாரிகள் அல்லது மகாராஷ்ட்ரா அதிகாரிகள் (அங்கும் 10 கோடிகள் கொடுத்திருக்காங்க) யார் என்று இந்திய அரசோ தமிழக அரசோ கேட்கவேயில்லை..!
ஒரு வெளிநாட்டில் நம் இந்திய மானம் கப்பல் ஏறுது!! ஒரு வழக்கு இல்லை. வாய்தா இல்லை. எருமை மாட்டு மேலே மழை பேஞ்சா மாதிரி இருப்பது எப்படி ???
இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா ?🤬🤬🤬
No comments:
Post a Comment