Tuesday, October 1, 2019

*சிலருக்கு #ஏளனமாகத்தான் தெரியும்"....,!!*


*"எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே"....?*
.அந்த மரத்தடியில......,
*" செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியது தானே"....!!*
அந்த பெருசு...
*" வயசு பொண்ணுங்கன்னா காசு கேக்க மாட்டார்".....!!*
*சரியான ஜொள்ளு பார்ட்டி"....!!*
*சுமாரா இருக்குற எனக்கே"....,*
*"நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்".....!!*
*"நீ பாக்கிறதுக்கு அப்படியே தமன்னா'வாட்டம் ....*
*பளபளன்னு இருக்கே". . ...!!*
*உன் காலைப் பார்த்துக்கிட்டே.....,*
*" மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!".....’!!*
*வேறு வழியின்றி....,*
*அந்த தமன்னா பெரியவரிடம் போக....,*
*"செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார்".......!!*
*தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும்,*
*‘‘கூலி எவ்வளவு"......?*
என்றாள்.
_‘‘என்னம்மா இது"....?_
_"உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு....!_
_வேணாம்மா..! கிளம்பு’_’ என்றார் பெரியவர்.
*‘‘பாத்தியாடி.....?*
*நான் சொல்லலை.....!!*
*"பெருசு ஜொள்ளு பார்ட்டி...டி...!’’*
என்று கிசுகிசுத்தாள் தோழி.
*‘‘உஷ்...’’ என அவளை அதட்டி விட்டு தமன்னா.....,*
*" ஏன் காசு வேணான்னு சொல்லுறீங்க பெரியவரே "....!!*
_என் பொண்ணு படிக்கிற
காலேஜ்ல தான நீ படிக்கிற கண்ணு"....!!_
_நீயும் என்னோட பொண்ணு மாதிரி தாம்மா...!!_
_காசு வேணாம்மா" ....!!_
*ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள்.*
*‘‘எடுத்துக்கங்க.....!!*
*"இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது"......!!*
*" கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும்"......!!*
அப்பத் தானே....
*" உங்க பெண்ணைக் காலேஜ்ல படிக்க வைக்க முடியும்".....?*
*நம்ம பொண்ணு கூட காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க தானேனு....,*
*" ஒரு பிரியத்தில யாருக்கும் ஓசில தச்சுக் குடுக்காதீங்க அப்பா".....!!*
*இந்த உலகத்துல எல்லோரும் அவ்வளவு நல்லவங்க இல்லை....*
*இங்க 'பாசத்தை கூட வேஷமாக'த் தான் பார்ப்பாங்க "....!!*
*ஜொள்ளு பார்ட்டி'ன்னு வாய் கூசாமா சொன்னவள் முகம் இப்போ இருண்டு போனது"....!!*
*சாரிடி..! தப்பா நினைச்சிட்டேன் அப்பாவை".....* என்றாள்....!!
*இந்த உலகில் நாம் செய்யும்
#உதவிகள்கூட.....,*
*சிலருக்கு #ஏளனமாகத்தான் தெரியும்"....,!!*
நான் சொல்றது சரிதானே நண்பர்களே!
ஆர்வம் குறையாத காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...