Wednesday, October 16, 2019

அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் கோயில்.

வீடு கட்ட போறீங்களா ! புதிய நிலம், மனை வாங்க தடங்கலா ? அப்படியானால் செவலூர், அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் கோயில் சென்று வழிபட்டு கட்டிட வேலையை தொடங்குங்கள் !. தடங்கலின்றி வீடு அலுவலகம் என்ன புது கட்டிடம் என்றாலும் தடங்கலின்றி வேலை முடிந்து சீக்கிரம் புதுமனை புகலாம் !பால் காய்ச்சலாம் !புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை -பொன்னமராவதி வழியில் குழிபிறையில் இறங்கி 3 கிமீ ஆட்டோவில் சென்றால் கோவில் செவலூர் வாஸ்து கோயில், வந்து விடும் !
புதிய நிலம், மனை வாங்க தடங்கல் என்றால் ஒரு முறை சென்று தரிசித்து வேண்டிக்கொள்ளுங்கள்
போன் : 04322 221084 97869 65659 இன்று 12/10/2019 சனிக்கிழமை பதிவு செய்துள்ளோம்.
செவலூர்,அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் திருவடிகள் சரணம்
அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் கோயில். செவலூர், அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் கோயில். வாஸ்து கோயிலாகப் பொதுமக்களால் வழிபாடு செய்யப்படுகிறது.
செவலூர், அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் கோயில். வாஸ்து கோயிலாகப் பொதுமக்களால் வழிபாடு செய்யப்படுகிறது.
புதிய நிலம், மனை வாங்க முடியாதவர்களும், வாங்கிய மனையில் வாஸ்து தோஷங்களால் கட்டடம் கட்டத் தடைகள் உள்ளவர்களும் வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களான வைகாசி -21, ஆடி-11, ஆவணி- 6, ஐப்பசி -11, கார்த்திகை -8, தை - 12, மாசி -22 ஆகிய நாட்களில் இங்கு நடைபெறும் விசேஷ ஹோம பூஜைகளில் கலந்துகொண்டு பலன்பெற வெளியூர்களிலிருந்தும் திரளாக வந்து செல்கிறார்கள். வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் வந்து பூமீஸ்வரர் முன் கற்களை வைத்து வாஸ்து அஷ்டோத்திர வழிபாடு செய்து எடுத்துச் செல்வோர் பலர்.
சிவலிங்கம் 16 பட்டைகளைக் கொண்டது. சிவலிங்கத்திற்கும் ஆவுடைக்கும் இடையே இடைவெளி உள்ளது. சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்யும் பால் மற்றும் தண்ணீர் இந்த இடைவெளி வழியாகப் பூமிக்குள் சென்று விடுகிறது. ஆவுடையில் வழிந்தோடும் தண்ணீர் மட்டுமே கோமுகத்தின் வழியாக வெளியே விழுகிறது.
கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் வடிவத்தை ஒத்த (ஆவுடையில்லாத) சிவலிங்கம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் அம்மன் சந்நிதி அருகே உள்ளது.
புதிதாக வீடு தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் முதலான கட்டிடங்கள் கட்டுவோர், வாஸ்து நாளன்று இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து, புதிய செங்கல்களை யாகத்தில் வைத்து எடுத்துச் சென்று கட்டிடங்கள் கட்டுகின்றனர். வாஸ்து நாளன்று வெளிநாட்டில் இருந்தும் அன்பர்கள் வந்து வழிபாடுகள் செய்து செங்கல்களை எடுத்துச் செல்கின்றனர்.
கோயில் எங்கும் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. செவலூர் பெரியய்யா ஆசாரி அவர்கள் கோயிலின் அருளாற்றல் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். (9524375132)
வாஸ்து தோஷம் போக்கும் பூமிநாத ஈஸ்வரர் கோசொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று பலர் நினைத்தாலும் அது கனவாகவே முடிந்து விடுகிறது.
ஒருசிலர் வீடுகட்ட மனை வாங்கிவிட்டாலும் வாஸ்துக்குறை, தோஷங்கள் ஏற்பட்டுக் கட்டி முடிக்க முடியாத பரிதாபமான நிலை உள்ளது. இந்தச் சிரமங்களைக் களைந்திட பக்தர்கள் சென்று வழிபடும் திருத்தலம் ஒன்று பலருக்கும் தெரியாமல் பாண்டி மண்டலத்திலே புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் திருமயத்திற்கு அருகில் உள்ளது.
செவலூர் என்று அழைக்கப்படும் இப்புனித பூமியை வானம், அந்தரம், சுந்தரம் என்று முப்பெரும் பகுதிகளாக வகைப்படுத்திச் சிறப்பிக்கின்றனர். அதாவது மூன்று இறையருட் கூட்டும் திருத்தலங்கள் இங்கே உள்ளன. விண்ணைத் தொடும் உயரத்தில் உள்ள காஞ்சாத்து மலையின் மேல் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சமேதராகவும், அடுத்ததாக ஆண்டாமடமும் அருகம்பூஞ்சுணையும் அமைந்த அந்தரத்தில் சுந்தரேச சுவாமியும், இரண்டுக்கும் நடுவில் கீழ்ப்பகுதியில் காணப்படும் விளைநில பாகத்தைத் தலமாகக் கொண்டு ஆரணவல்லி தேவியுடன் பூமிநாத ஈஸ்வரர் கோயில் கொண்டருள்கிறார்.
காஞ்சாத்து மலை உச்சியில் ஆறுமுகக் கடவுள் சேவற்கொடியோடு பல ஆண்டுகளாக அருள்பாலித்து வருவதால் இவ்வூரை சேவலூர் என்று அழைத்த பக்தர்கள், பிறகு முதல் எழுத்தைக் குறிலாக்கிச் செவலூர் என்றழைக்கத் தொடங்கியதால் செவலூராகவே இன்று வரை அழைக்கப்படுகிறது.
பூமாதேவி தவமிருந்து தனது கைகளாலேயே பதினாறு பட்டை லிங்கமூர்த்தியை உருவாக்கினார் என்று தலவரலாற்றில் குறிப்பு உள்ளது. இந்த பூமிநாதருக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளில் சேரும் எல்லா நீரும் அப்படியே பூமிக்குள் சென்று விடுவது குறிப்பிடத்தக்கது. செவலூர் சிவபிரானுக்கு பூமியின்கீழ் விளையும் கிழங்கு வகைகளில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களே நிவேதனமாக வைத்துப் படைக்கப்பட்டு, வருகின்ற பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆலயத்தின் அருகிலுள்ள தீர்த்தம் பிருத்வி புட்கரணி என்று சொல்லப்படுகிறது. சாதாரணக் குளம் போலக் காட்சி அளித்தாலும் பூலோகத்திலுள்ள அனைத்துத் தீர்த்தங்களோடும் தொடர்புடையதாம். நீர் வரும் காலங்களிலும் கோடை காலத்திலும் இந்தப் பிருத்வி தீர்த்தத்தில் நீர் வற்றாமல் ஒரே அளவில் இருக்கும் என்பது அதிசயம்!
பெரிய சேதங்களோடு காணப்படுகிற செவலூர் பிரானுடைய ஆலய மண்டபங்களில் சூட்சும தேகத்துடன் ஆறுகால பூஜைகளை தேவர்கள் வந்து நடத்திவிட்டுச் செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பூமிநாத சுவாமி கோயிலின் வடக்கு பாகத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் கி.பி.1458ம் ஆண்டு பார்த்திப வருஷம் தை மாதம் 31ம் தேதி கோயிலுக்கு பூஜைத் திருநாள் நடத்த இளையாத்தங்குடி நகரத்தார் முதன்மை மானியம் தந்தனர் என்று உள்ளது.
பூமீஸ்வரர் கோயிலின் வாசற்படிக்குத் தென்புறமாக சுவரில் ஒரு கல்வெட்டு கோயிலின் பழமையைத் தெளிவாக்குகிறது.
விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பலிபீடம் சுற்றிலும் அருள்பாலிக்க ஏகதள விமானக் கருவறையின் கீழ் பதினாறு பட்டை சிவலிங்கத்திருமேனியராகக் கிழக்கே திருமுக மண்டலத்தோடு அருட்காட்சி தருகிறார். இரண்டு கைகளிலும் தாமரை மலர்களோடு கீழ்க்கைகளை அபய வரத முத்திரை காட்டியவாறு தாமரை பீடத்துடன் ஆரணவல்லி தெற்கே திருமுக மண்டலத்துடன் நின்றருள் புரிகிறார்.
மகாமண்டபம், அர்த்த மண்டபங்களில் சிவாலய மூர்த்தங்கள் இருந்து இயற்கைச் சீற்றங்களால் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இத்தலத்திற்கு வந்து பூமிநாதரையும் ஆரணவல்லியையும் வழிபட்டால் வீடு, நிலம் தொடர்புடைய தடைகள், பிரச்னைகள் நீங்கி நலமடையலாம் என்று தரிசிக்க வந்து பலன்பெற்ற பக்தர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது.புதுக்கோட்டை- பொன்னமராவதி நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு என்ற நிறுத்தத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வாலயம். கி.பி 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலானது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த கோவிலாகும். இக்கோயில் சிவபெருமானுக்கு 16 பட்டைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு பட்டையும் பூமாதேவி பூஜைசெய்த ஸ்தலமாக கூறப்படுகிறது. அதுபோல இக்கோயிலில் அபிஷேக தீர்த்தம் பூமிக்குள்ளேயே சென்றுவிடும்படி அமைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு பூமிநாதர் ஆலயம் - செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.
மூலவர் : பூமிநாதர்
தல சிறப்பு: இத்தல லிங்கம் மஞ்சள் காப்பு, சந்தான காப்பு, கஸ்தூரி காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தியதால் பல பட்டைகளை கொண்டதாக காட்சி தருகிறார். மகா விஷ்ணுவால் எலுப்பப்பட்ட புண்ணியத் தலம்.
இங்கு வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது.
உங்களுக்கு ஏற்படும் நில பிரச்சினைகள், நீதி மன்ற வழக்குகள் மற்றும் தடைப்பட்டுள்ள காரியங்கள் ஆகியவற்றிற்கு வாஸ்து நாட்களில் பூஜை செய்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும். செவ்வாய்கிழமைகளிலும் இப்பூஜையை செய்யலாம்.
அனைவரும் பூமிநாதரின் அருள்பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புதுக்கோட்டை பொன்னமராவதி பஸ் ரூட்டில் குழிபிறையிலிருந்து 3 கி.மீ.தொலைவில் செவலூர் உள்ளது.
செவலூர் பூமிநாத சாமி கோயில் புதுக்கோட்டை -பொன்னமராவதி வழியில் குழிபிறையில் இறங்கி 3 கிமீ ஆட்டோவில் போகவேண்டும் .6 A டவுன் பஸ் எப்போதாவது வரும்
போன் : 04322 221084 97869 65659 அருள்மிகு ஆரணவல்லி அம்மன் பூமிநாதர்
புதுக்கோட்டை மாவட்டம், செவலூர்,
செவலூர்,அருள்மிகு ஆரணவல்லி யம்மன் உடனாய பூமிநாதர் திருவடிகள் சரணம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...