நவராத்திரி என்று வந்து விட்டாலே இசைஞானியின் வீடு விதவிதமான கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும்... அங்கு கூடிய அனைத்து மனிதர்களுக்கும் பூஜை புணஸ்காரங்களுக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது...🌺🌺🌺
தனது குடும்பம் இந்த நிகழ்வை தொடங்கியது பற்றி இசைஞானியே கூறியது “நான் நவராத்திரி கொண்டாட்டங்களை 1980களின் தொடக்கத்தில் இருந்து செய்து வருகிறேன். இது என் மனைவியின் யோசனையாக இருந்தது. நான் சென்னையில் திரைப்பட உலகில் பணியை தேடும் பொருட்டு அலைந்து இருந்த வருடம் நவராத்திரி நடந்து கொண்டுருந்தது பலத்த மழையின் நடுவே... இடுப்பளவு வரை ஆழமான நீர் சூழ்ந்திருந்தது.. எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லாத சூழலில் எங்கள் சூழ்னிலையை அது மேலும் வேதனைப்படுத்தியது.. எனவே நானும், பாரதிராஜாவும், பாஸ்கரும் ராம் தியேட்டரிலிருந்து வடபழனி முருகன் கோயில் வரை கடைகளில் பரிமாறப்பட்ட பொரி மற்றும் சுண்டல் போன்ற உணவுபொருட்களை சேகரித்து, அதையும் தண்ணீரையும் கொண்டு மூன்று நாட்கள் எங்கள் வயிற்றை நிரப்பினோம்” என்றார்.❤️❤️❤️
“இந்த சம்பவத்தை எனது மனைவி ஜீவாவிடம் விவரித்தபோது, கலங்கிய அவர்கள் 10 நாட்கள் தங்கள் வீட்டில் அனைவரையும் அழைத்து உணவு பரிமாறுமாறு கூறிய யோசனையே இந்த நிகழ்வு....” இசைஞானி...😍😍😍
நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியால் சிறப்பிக்கப்பட்டது. மறைந்த ‘மாண்டலின்’ சீனிவாஸ் தான் இசைஞானியின் வீட்டில் நவராத்திரி அன்று முதன்முதலில் இசை நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.🌺❤️🙏
No comments:
Post a Comment