Sunday, December 22, 2019

ரூ.1,600 கோடி சொத்து சசிகலா மோசடி அம்பலம்.

பண மதிப்பிழப்பு நேரத்தில், ௫௦௦ மற்றும் ௧,௦௦௦ ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி, சசிகலா குடும்பத்தினர், பினாமி பெயர்களில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி, மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருடன் தொடர்புடைய, 187 இடங்களில், 2017 நவம்பரில், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

முடக்கியது


சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா, 'டிவி' அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்தது. ஐந்து நாட்களாக நடந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும், பல நுாறு கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சிக்கின. சோதனை நடத்திய, 187 இடங்களில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி, போலி நிறுவனங்கள், சொத்துகள் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். தொடர்ந்து, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
மத்திய அரசு, 2017 நவம்பர், 8ல், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என, அதிரடியாக அறிவித்தது. இந்த சமயத்தில், சசிகலா ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில், 2017 நவம்பரில், வருமான வரி சோதனை நடந்தது, அப்போது, அங்கு சொத்துக்களை வாங்கியதற்கான சில புகைப்படங்களும், ஆவணங்களும் சிக்கின. அது தொடர்பாக, செந்தில் என்பவரிடம், விசாரணை நடந்தது.


வருமான வரித்துறை
அப்போது, பணமதிப்பிழப்பு நேரத்தில், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி, சென்னை, மதுரை ஆகிய இடங்களில், வணிக வளாகங்களையும், புதுச்சேரியில் ரிசார்ட்டையும், சசிகலா வாங்கி உள்ளார்.மேலும், கோவையில், பேப்பர் மில், காற்றாலைகள், சென்னை ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மென்பொருள் நிறுவனம் என, மொத்தம், 1,600 கோடி ரூபாய்க்கு, மோசடியாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.வருமான வரித்துறையினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் வாயிலாக, இந்த விபரங்கள் தெரிய வந்து உள்ளன.
 ரூ.1,600 கோடி சொத்து ,சசிகலா, மோசடி, அம்பலம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...