Sunday, December 22, 2019

ஜன., 5 முதல் பொங்கல் பரிசு: கலெக்டர்களுக்கு அனுமதி.

'ரேஷன் கடைகளில், ஜனவரி, 5ம் தேதி முதல், பொங்கல் பரிசு வழங்க
அனுமதிக்கலாம்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தர
விட்டு உள்ளது.

தமிழகத்தில், பொங்கலை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு துண்டு உள்ளிட்ட, பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அரசு அறிவித்தது.ஊரக உள்ளாட்சிகளுக்கு, வரும், 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடக்க
உள்ளதால், பொங்கல் பரிசு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன், பொங்கல் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதே நேரம், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோரை தேர்வு செய்வதற்கான
மறைமுக தேர்தல், ஜனவரி, 11ல் நடக்க உள்ளது.எனவே, அதற்கு முன், பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கலாமா என்ற யோசனையில், பல மாவட்ட நிர்வாகங்கள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள், ஜனவரி, 4ம் தேதி தளர்த்தப்பட உள்ளன.
எனவே, 5ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கலாம் என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 ஜன. 5 முதல், பொங்கல்,பரிசு,கலெக்டர்களுக்கு,அனுமதி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...