தருமையாதீனத்தின் 27ம் குருமணிகள் ஞானபீடம் ஏறிய பிறகு *"முதல் தலயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில்"* ஸ்தலயாத்திரை செய்ய இருக்கிறார்கள்
"மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே" என்று அப்பரடிகள் போற்றிப் பரவும் இத்தலம் "புள்ளிருக்கு வேளூர்" என்று வழங்கப்படும்
இங்கு "தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரனாக அருள்பாலிக்கும் இறைவரது விசேட மூர்த்தியாக செல்வமுத்துக்குமார சுவாமி" எழுந்தருளி இருக்கிறார்
தருமையாதீனத்தின் *"வேளூர் தேவஸ்தானம்"* இவ்வாலயத்தை பராமரிக்கிறது,
"தருமையாதீனத்தின் விசேட வழிபடு மூர்த்திகளில் செல்வமுத்துகுமார சுவாமிக்கு சிறப்பிடம் உண்டு"
"தருமையாதீனத்தின் விசேட வழிபடு மூர்த்திகளில் செல்வமுத்துகுமார சுவாமிக்கு சிறப்பிடம் உண்டு"
ஆதலால் 27ஆம் குருமணிகளின் முதல் யாத்திரை புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கானதாக அமைகிறது
எதிர்வரும் செவ்வாய் கிழமை (24/12/19) அன்று நிகழும் இவ்வைபவத்தன்று
வைத்தீஸ்வரன் கோயில் ஊர்மக்கள் மற்றும் வேளூர் தேவஸ்தானம் சார்பாக
"27ஆம் குருமணிகளுக்கு பட்டினப் பிரவேச உற்சவமும் கொலுக்காட்சியும் நடைபெற இருக்கின்றது"
அன்று காலை 08.30 மணிக்கு மாடவீதிகளில் பட்டினப் பிரவேம் நிறைவாகி, சுவாமிகள் ருத்ராபிஷேக தரிசனம் செய்கிறார்கள்
தொடர்ந்து "ஞான கொலுகாட்சியும்" ஊர்விருந்தும் நடைபெற இருக்கிறது
அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு குருவருளுக்கும் அதன் காரணமாக திருவருளுக்கும் பாத்திரம் ஆகுவார்களாக
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment