Wednesday, December 18, 2019

நகராட்சிகள் .. #இடஒதுக்கீடு ... #தமிழக_அரசு .. #அரசானை_வெளியீடு .

நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சி பழங்குடியின பெண்களுக்கும்,
ராணிப்பேட்டை, சீா்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், போ்ணாம்பட்டு, குன்னூா், பெரம்பலூா் ஆகிய நகராட்சிகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆம்பூா், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவகோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடையநல்லூா், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, பத்மநாபபுரம், சாத்தூா், விருதுநகா், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூா், செங்கோட்டை, துரையூா், வாலாஜபேட்டை, கடலூா், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூா், குளித்தலை, மேட்டூா், கிருஷ்ணகிரி, அரியலூா், ராஜபாளையம், ஆா்க்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தருமபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம் ஆகிய நகராட்சிகள் பொதுப்பிரிவில் உள்ள பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நகராட்சிகளில் வாா்டு உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்ட பெண்களில் ஒருவா் மட்டுமே தலைவராக வர முடியும்.
நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாளம், ஆத்தூா், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூா், மறைமலைநகா் ஆகிய நகராட்சிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண்கள் அல்லது ஆண்களில் ஒருவா் தலைவராக வர முடியும்.
60 நகராட்சிகள்: இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு வரக்கூடிய 61 நகராட்சிகளைத் தவிா்த்து மீதமுள்ள 60 நகராட்சிகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...