தமிழ்நாட்டில் கருணாநிதி என்றொருவர் இருந்தார், கடவுள் மறுப்பு கொள்கையாளர்.
வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் இந்துமதத்தை சீண்டிகொண்டே இருந்தார், சில இடங்கள் மகா மட்டமானவை
ஆனால் கருணாநிதி மேல் யாரும் பொங்கியதில்லை, கோடிகணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார், இவரெல்லாம் முதல்வராக தகுதியானவரா என்றெல்லாம் கேள்விகள் இல்லை
இதெல்லாம் ஒருவரின் தனிபட்ட நம்பிக்கை என சொல்லி தந்திரமாக குனிந்துகொண்டார்கள்
பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது, வெங்காயம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். எகிப்தில் இருந்தும் இன்னும் பல தேசத்தில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யபடுகின்றது என்கின்றார் நிர்மலா
ஆனாலும் தொடர்ந்து கேள்வியாய் கேட்கின்றார்கள், உங்களுக்கு வெங்காய அவசியம் தெரியுமா தெரியாதா, இந்திய வெங்காயம் போல வருமா? என்றெல்லாம் விதண்டாவாத கேள்வி
அந்த இடத்தில்தான் "நான் வெங்காயம் சேர்ப்பதில்லை" என்றார் நிர்மலா
அதற்குத்தன் இவ்வளவு குதிப்பு, கருணாநிதி இந்துமதத்தை போட்டு கிழித்தெறிந்தால் அது அவரின் தனிபட்ட விஷயமாம், நிர்மலா நான் வெங்காயம் சேர்ப்பதில்லை என்றால் பார்ப்ண திமிராம்
இந்நாட்டில் பிராமணனுக்கு தனி நீதி போல
ரபேலை பிடிக்க முயன்று தோற்றார்கள், கார் உற்பத்தி என ஒப்பாரி வைத்து தோற்றார்கள்
ரபேலும் , கார் ஆலையும் கைகொடுக்கா நிலையில் எதிர்கட்சிகள் வெங்காயத்தை உரித்து அழுதுகொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment