Saturday, December 21, 2019

வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள்

RO சுத்திகரிப்பு செய்து சேமிக்கப்பட்ட நீரானது எத்தனை நாள் வரை பருக உகந்தது? குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அதில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது?
வீட்டில் RO சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் குடத்தில்தான் வைக்கப்படும். அதனால் அதன் ஆயுட்காலம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே. பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
அதன் பிறகு அதில் பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகள் வளரக் கூடும் என்பதால் அந்த நாட்களுக்கு மேல் பயன்படுத்துவது தவறு.
சரி. அப்படி என்றால் மினரல் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்துவது தவறு இல்லையா?
மினரல் வாட்டர் கம்பெனிகளில் இருந்து வெளியிடப்படும் வாட்டர் பாட்டில்கள் அல்லது 20 லிட்டர் குடிநீர் கேன்கள் அதிகபட்சமாக 20 முதல் 30 நாட்கள் மட்டுமே காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதற்குக் காரணம் அரசின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு இன் விதி.
நல்ல தரமுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் குடிநீர் ஆனது 2 வருடங்கள் வரை பயன்படுத்த தகுந்ததாகும். ஆனால் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் வரை மட்டுமே. அந்த மாதிரியான நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை.
திறக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் அதிகபட்சம் 30 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
திறக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிகபட்சம் 8 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். அதுவே குளிர் சாதன பெட்டியில் இருந்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
தண்ணீர்தான் கெட்டுப் போகாதே எதற்கு இவ்வளவு குறைந்த ஆயுள் காலம்?
முதல் காரணம் சுவை குறைந்துவிட்டால் அல்லது கெட்ட வாசனை வீசினால் வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டார்கள்.
குடிநீர் வாட்டர் பாட்டில்கள் பெரும்பாலும் சூரிய வெளிச்சத்தில் வைக்கப்படுகிறது. இதனால் பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக் சில ரசாயனங்களை கலக்கிறது. இதனால் கேன்சர் கூட வரலாம்.
குடிநீர் வாட்டர் பாட்டில்களில் அதிகமாக பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. அது சூரிய வெளிச்சத்தில் வைக்கும் போது அதிகமாகிறது. கார்களின் உள்ளே வைக்கப்படும் குடிநீர் சிலசமயம் சூடாகிறது. இந்த நீரைப் பயன்படுத்துவதால் கூட நோய்கள் வரும். திறந்து வைக்கப்பட்ட குடிநீரில் சீக்கிரமாக பாக்டீரியாக்கள் கிருமிகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் சில நோய்கள் வரலாம்.
பொதுவாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை அருந்துவதாலும் ஆண்மைக்குறைவு போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
எனவே அதிகபட்சமாக வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள்
சரி இதற்கெல்லாம் யார் காரணம்?
ஒன்றே ஒன்று தான் அதுதான் பிளாஸ்டிக்.
முன்னோர்கள் ஆற்றுத் தண்ணீரை கூட குடித்து இருக்கின்றனரே?
முன்காலத்தில் பிளாஸ்டிக்குகள், ரசாயனங்கள் பயன்படுத்தியது இல்லை. கழிவு நீர் ஆற்று நீரில் கலக்காது.
இப்போது உள்ள கிருமிகள் அப்போது இல்லை. மீன்கள் கிருமிகளை உண்டு விடும். அதனால் ஆற்றுத் தண்ணீர் சுத்தமானதாக இருக்கும்.
அருவி நீர் கூட பல மூலிகைகள் கலந்து வருவதால் அதில் நோய்க்கிருமிகள் குறைவாக இருந்தது. அப்போது யாரும் நிலத்துக்கு அடியில் தண்ணீரை தேடியது இல்லை.
கிணற்றிலிருந்து நீர் இறைத்து இருக்கலாம். ஆனால் கிணற்றில் உள்ள நீரை உடனடியாக பயன்படுத்த மாட்டார்கள். ஊற்றிலிருந்து வந்த நீர் கிணற்றிலேயே பலவருடங்களுக்கு கிடக்கும். இதனால் அதில் உள்ள மற்ற தனிமங்கள் தரையில் படிந்து விடும். அது குடிப்பதற்கு ஏதுவாகிறது.
இப்போதும் தண்ணீருக்கு ஆயுட்காலம் அதிகம்தான். ஆனால் மழை நீருக்கு மட்டுமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...