உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், நேற்று, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும், 27 மற்றும், 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் படவில்லை.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும், 27 மற்றும், 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் படவில்லை.
அவசர வழக்கு
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதும், உச்சநீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மூத்த வழக்கறிஞர் அபிசேஷக் சிங்வி ஆஜராகி, 'தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தி.மு.க., சார்பில் தாக்கல் செய்த கூடுதல் மனுவை அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை, 5ம்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க., சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில், புதிய மனு ஒன்றை, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், வழக்கறிஞருமான வில்சன் தாக்கல் செய்துள்ளார்.அம்மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதற்கேற்ப வார்டு மறுவரையறைப் பணிகளை செய்ய வேண்டும். இந்த பணி நிறைவடைந்த பின், உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
இன்று விசாரணை
தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தி.மு.க., தாக்கல் செய்த கூடுதல் மனு, உச்சநீதிமன்றத்தின் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அத்துடன், இந்த புதிய மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிகிறது. வழக்கு விசாரணைக்காக, தமிழக தேர்தல் அதிகாரிகள் டில்லி சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment