இந்தியாமீது பாகிஸ்தான் போர் தொடுத்தபோது இந்திய ராணுவத்தின் படைத்தலைவராக இருந்தவர் ஜெனரல் சவுத்ரி..
சவுத்ரி பாக்.மீது பயங்கர எதிர் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.
ஏனெனில் ராணுவ பாணியில் தற்காப்பு தாக்குதல் என்பதே ஏற்கெனவே தோற்றுவிட்டதற்கான அடையாளமாக கருதவேண்டிய ஒன்றாகும்.
பாக்.ராணுவம் காஷ்மீரில் நுழைந்துவிட்டிருந்தது.
சவுத்ரி நம் பெரிய ராணுவத்தை கொண்டு பாக்.எல்லையில் நாலாபுறமும் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.
அதனால் பாக்.ராணுவம் குழப்பமடைந்து எந்த பக்கம் செல்வதென புரியாமல் விழிபிதுங்குவார்கள்.
அதனால் அவர்களால் இந்தியாவை எதிர்கொள்ளமுடியாமல் போகும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் ஜவஹர்லா நேரு 6`மணிவரை பொறுத்திருக்குமாறு சவுத்ரிக்கு கட்டளையிட்டார்.
தாக்குதலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் இரவு முழுவதும் காபினெட் மீட்டிங் நடந்தது. அவர்களால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை.
பொழுது விடிந்து 7`மணிக்கு வானொலி செய்தியை கேட்ட நேரு திடுக்கிட்டார்.
இந்திய ராணுவம் லாகூருக்கு 15 கிமீ தூரத்திற்கு அருகே சென்றுவிட்டதாக செய்தி வந்தது.
அதன்படி பார்த்தால் இன்னும் அரைமணிநேரத்தில் லாகூரை இந்தியா பிடித்துவிடும்.
சவுத்ரி 5`மணிக்கே பாக்.எல்லைக்குள் தாக்குதலை தொடங்கியிருந்தார்.
உடனடியாக நேரு சவுத்ரிக்கு படைகளோடு இந்தியா திரும்புமாறு உத்தரவிட்டார்.
இங்கே காஷ்மீரின் அழகிய பகுதியை பாக்.ராணுவம் அதற்குள் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்திருந்தது.
அமெரிக்கா தலையிட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த பகுதியை பாக்.அரசு தீர்மானம் நிறைவேற்றி தங்கள் நாட்டோடு இணைத்துக்கொண்டது.
உலக வரைபடத்தில் அந்த பகுதி தங்கள் நாட்டின் எல்லைக்குள் வருமாறு பார்த்துகொண்டது.
இந்தியா வந்த சவுத்ரியை பதவி விலகுகிறாயா? அல்லது நாங்கள் நீக்கட்டுமா? என நேரு கேட்டார்.
சவுத்ரி ஓய்வு வயதை ஏற்கெனவே அடைந்திருந்ததால் பதவியிலிருந்து வெளியேறினார்.
சவுத்ரி நேருவிடம் ``ராணுவ நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கேதும் தெரியாது.நாங்கள் சொன்னாலும் புரியப்போவதில்லை.
நீங்கள் 6`மணிக்கு சொல்வதாக கூறிய உத்தரவு எங்கே?`` என்று கேட்டார். நேருவிடம் பதிலில்லை. .
அன்று லாகூரை பிடித்திருந்தால் வேறொரு ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்கும்.
நீங்கள் காஷ்மீர் பகுதியை விட்டால் நாங்கள் லாகூர் எனும் பெரிய நகரத்தை விடுகிறோம் என்று. இதன்மூலம் அவர்களை மிரட்டியிருக்கலாம்.
காஷ்மீரில் போர் நிறுத்தம் என்றால் லாகூரிலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறைவேற்றியிருக்கும்.
இந்த முட்டாள்தனமான அரசியல்வாதிகளால் அன்று நடக்க இருந்த ஒரு ஒப்பற்ற வீரம் செரிந்த சாகச வரலாற்றுச்சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்பு காஷ்மீரை எந்த அரசியல்வாதியாலும் மீட்கமுடியவில்லை.
ஐ நா சபையில் பலமுறை இதுகுறித்து பேசப்பட்டும் ஒரு நியாயமும் இதுவரை இந்தியாவிற்கு கிடைக்கவில்லை.
அரைமணிநேரத்தில் முடிக்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை நாற்பதாண்டுகளை கடந்து இன்னும் நீள்கிறதென்றால் அதற்கு அரசியல்வாதிகளே காரணம்.
No comments:
Post a Comment