Saturday, February 15, 2020

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு தடைகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகி விட்டது ..

2016 ஆம் ஆண்டில், 136 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெயலலிதா , அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
தெளிந்த , நீரோடை போல் சென்று கொண்டிருந்த அதிமுகவில் அடுத்தடுத்து குழப்ப மேகங்கள் சூழ்ந்தன
அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார் .
தனது ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிப்ரவரி 18 ஆம் தேதி , அவர் , சட்டப்பேரவையில் கொண்டு வந்த போது ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக செயல்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் பேரவையில் தனது பெரும் பான்மையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி , அவருக்கு ஆதரவாக 122 வாக்குக்கள் பதிவாகின ..
ஆனால் அடுத்த சோதனை டிடிவி தினகரன் மூலம் வந்தது .. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர்
அதனால் ஆட்சிக்கு நெருக்கடி எழுந்தபோது 18 எம்.எல். ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் ஆகிய எம்.எல்.ஏக்கள் உயிரிழந்ததை அடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 113 ஆக குறைந்தது.
234 தொகுதிகளில் 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில்,113 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி
அரசியல் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு , ஆட்சியை திறம் பட நடத்த தொடங்கினார் ..
மைனாரிட்டி அரசு என்று விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் , 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்கும் என்று அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது
ஒரு கட்டத்தில் இடைத்தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது
இந்நிலையில் இடைத்தேர்தலோடு 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு அதிர்ச்சியை தந்தது
ஆனால் அந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 9 இடங்களை கைப்பற்றியதன் மூலம் பேரவையில் அதிமுக பலம் 122 ஆக உயர்ந்தது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு , தமது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார் , எடப்பாடி பழனிசாமி
அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், தனது பிரச்சார வியூகத்தின் மூலம், அதிமுகவுக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக 214 மாவட்ட கவுன்சிலர்கள், ஆயிரத்து 780 ஒன்றிய கவுன்சிலர்களை பெற்று உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றார்

இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் , எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கின் தீர்ப்பு கடந்த 14 ஆம் தேதி வெளியானது ... அவர்கள் மீதான தகுதி நீக்க கோரிக்கை மீது சபாநாயகரே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த தன் மூலம் , எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு தடைகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகி விட்டது ..
சாமான்யராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தனது 3 ஆண்டு முதலமைச்சர் பயணத்தில் சாமான்யர்கள் மனம் குளிரும் சாதனைகள் பலவற்றை செய்திருக்கிறார் . விவசாயிகளின் மனம் குளிர வைத்த குடிமராமத்து திட்டம் , டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க பட்ட வேளாண் சிறப்பு மண்டலம் என அறிவிப்பு , பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் , தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் , ஆவடியுடன் சேர்த்து மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு , மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு , பிரதமர் மோடி சீன அதிபர் மாமல்லபுரம் வருகைக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் , வெளிநாட்டு பயணத்தின் மூலம் தொழில் முதலீடுகள் , உலக முதலீட்டாளர்கள் மாநாடு , ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் , அரசு ஊழியர்கள் போராட்டத்தை சாதுர்யமாக கையாண்ட விதம் என்று தனது நிர்வாகத்திறனையும் வெளிப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி
இது போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சூடான அரசியல் களத்தில் , எதிர்கணைகளை முறியடித்து சாதுர்யமாக செயல்பட்டு 3 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்து , 4 ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...