1) பணம் வாங்கிக்கொண்டு சன்னதிக்கு நேராக அழைத்துச் செல்வதாகக் கூறி தொந்தரவு செய்யும் இடைத்தரகர்களை அங்கு காண முடியவவில்லை. எல்லோரும் வரிசையில் நின்றுதான் ஆண்டவனை தரிசிக்க முடியும்.
2) கட்டண தரிசனங்ககள் அங்கு கிடையாது. எல்லோருக்குமே தர்ம தரிசனம்தான்.
3) எல்லா சன்னதிகளிலும் தீபாராதனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறும். வரும் பக்தர்களின் பர்சின் பருமனைப் பார்த்து தீபாராதனை காண்பித்து தட்டை நீட்டும் வழக்கம் இல்லை.
4) கோவில்களும் பூஜா பாத்திரங்களும் மிகப் பளபளப்பாக அதற்காகவே நியமிக்கப்பட்ட மூதாட்டிகளால் தேய்த்து வைக்கப்படுகின்றன.
5) எல்லாக் கோவில்களிலும் பக்தர்கள் அணிந்து செல்லும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு உண்டு. பேண்ட் ஷர்ட்டுக்கு அனுமதி இல்லை. வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்துதான் செல்ல வேண்டும்.
6) பொதுவாக கோவில்களுக்குள் யாரும் உரக்க ஊர்க்கதை பேசுவதில்லை. மௌனமும் கட்டுப்பாடும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
7) கோவில்கள் குறிப்பிட்ட நேரங்களில்தான் திறந்து மூடப்படுகின்றன. யாருக்காகவும் இதில் மாறுதல் கிடையாது.
இந்த காரணங்களால் கேரளக் கோவில்களுக்குள் ஒரு தூய்மையான பக்தியை உணர முடிகிறது.
No comments:
Post a Comment