Tuesday, April 7, 2020

ஊரடங்கு நேரத்தில் சும்மா தானே இருக்கீங்க. இந்த கதையை முழுசா படிச்சிட்டு கருத்து சொல்லுங்க..



திரும்பவும் சொல்றேன். முழு கதையையும் படிக்க வேண்டும்.
ஒருமுறை கிருஷ்ணதேவராயர் அரண்மனைக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு அறிஞர் வந்தாராம். அவர் தன்னுடைய தாய்மொழி எது என்று கண்டு பிடித்து சொல்பவருக்கு தான் அடிமை என்றும், தவறாக சொல்பவர் தனக்கு அடிமை என்றும் சவால் விட்டார்.
மன்னர் அவையில் இருந்த அமைச்சர்கள் அவரிடம் பல மொழிகளில் பல கேள்விகள் கேட்டாலும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் பதில் சொன்னதால், அவரின் தாய்மொழி எது என்று கண்டுபிடிக்க முடியாமல், தாங்கள் அவருக்கு அடிமை என்று ஒப்புக் கொண்டனர்.
மன்னருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தார். தன் அமைச்சர்கள் அடிமையாய்ப் போனது அவருக்கு பெருத்த அவமானமாய் போனது.
அந்த நேரத்தில் வெளியூர் சென்று இருந்த தெனாலிராமன் அவைக்கு வந்தார். மன்னர் அவரிடம் பிரச்சனையை கூறினார். தெனாலிராமன் தான் இப்போதுதான் ஊரிலிருந்து வந்ததால் நாளை பதில் சொல்வதாக கூறி வீட்டுக்குச் சென்றார்.
நள்ளிரவு நேரத்தில் தெனாலிராமன் அந்த வெளியூர் அறிஞர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, காவலுக்கு இருந்த வீரனுக்கு கொஞ்சம் தங்க காசுகள் கொடுத்து கதவை திறந்து விடச் சொன்னார். அங்கு நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த அறிஞரை ஒரு பிரம்பால் பலமாக அடித்தார். உடனே அந்த அறிஞர் 'ஓ அம்மே' என்று கூச்சலிட்டார். அவர் விழித்து பார்க்கும் முன்னரே தெனாலிராமன் மறைந்து தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். தான் ஏதோ கெட்ட கனவு கண்டதாக நினைத்து அறிஞரும் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை மன்னரின் அவைக்குச் சென்ற தெனாலிராமன் அவையோர் முன் அந்த அறிஞரின் தாய்மொழி மலையாளம் என்று கூறினார். அதுதான் உண்மை என்று ஒத்துக்கொண்ட அறிஞர் மற்ற அமைச்சர்களை விடுவித்ததுடன், தான் தெனாலி ராமனுக்கு அடிமை என்றும் ஒத்துக் கொண்டார். ஆனால் தெனாலி ராமன் அவரை மன்னித்து அவருடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இப்போது மன்னர் தெனாலிராமனைப் பார்த்து 'எப்படி கண்டுபிடித்தாய்?' என்று கேட்டார். தெனாலிராமனும் இரவு நடந்ததை கூறி 'எந்த ஒரு மனிதனும் திடீரென பெரும் துன்பம் வரும்போது தன்னையும் அறியாமல் தனது தாய்மொழியில்தான் கத்துவான்'. என்றார். மன்னரும் தெனாலிராமனை பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்த கதைக்கும், மோடி மெழுகு வர்த்தி ஏற்ற சொன்னவுடன், தன்னையும் அறியாமல் 'எழவு வீட்டில்தானே மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்' என்று கூறி, தான் ஒரு கிருஸ்தவன் என்பதை வெளிப்படுத்திய 'டேனியல் காந்தி' என்ற தெருப்பொருக்கிக்கும், 'விளக்கு பிடிக்க சொல்றாரு' என்று சொல்லி தங்களுடைய குலத்தொழிலை வெளிப்படுத்திய சொரியான் பேரன்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...