மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அரசுக்கு, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ. வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெ. வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருமான வரித்துறை சார்பில் ஜெ. செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.
No comments:
Post a Comment