வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும்,
அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும்.
அம் மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார்,
அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றிச் சொல்கிறார்.
வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.
நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார்.
தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர்.
அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.
வாதுக்குச் சண்டைக்குப் போவார். வருவார் வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடு வார்தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளந்து மயங்கிடு வார்விதி மாளும்மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏம்பனே.” (பட்.பா.18)
சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள்.
நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள்.
வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள்,
வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே.
நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சதி திட்டம் போடுவார்கள்.
தமக்காக உளைத்தவர்களுக்குக் கூட உபகாரம் செய்யாத இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.
”ஓயாமல் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரை வைவர் சதி ஆயிரம் செய்வர் சாத்திரங்கள்
ஆயார் பிறர்க்கு உபகாரம் செய்யார் தடை அண்டினர்க்கு ஒன்று
ஈயார் இருந்து என்ன போய் என்ன காண கச்சி ஏகம்பனே.” (பட்.பா.18)
ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.
”உணர்ந்து திருந்து என்கிறார் வேதாத்திரியார்.
”பெருந்துன்பம் உனக்கோ பிறருக்கோ உன்னால் வந்தால்
வருந்து. நீ முயற்சி செய்!
வழிகாண்! ஈடாற்றிடத்
திருந்திடு, பிறரையும்
திருத்திடு, உலகுக்கு
விருந்திடு. நல்வாழ்வின்
வித்தாம் இவ்வொழுக்கத்தால்” (ஞானகளஞ்சியம் பாக.1.பா.622)
திருந்தி வாழவும் வழிகாட்டுகிறார் வேதாத்திரி மகரிசி.
”பழக்கமே பற்றாக! பாசமாக!
பரிணமித்துச் சிக்கல் வாழ்விலாச்சு.
இழக்கின்றோம் இயற்கைவள இன்பமெல்லாம்.
இதையுணர்ந்து ஏற்றபடித் திருந்தி வாழ்வோம்.”
நன்றி. பட்டினத்தாரும் வேதாத்திரி மகரிசியும்….
No comments:
Post a Comment