'காங்கிரசில், குஷ்புவின் உழைப்பு வீணாகாமல் இருக்க, பா.ஜ.,வில், அவர் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, சச்சின் பைலட்டை நியமித்திருக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களில், ராகுலுக்கு எதிராக எழுந்த கருத்துக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்தார். இதனால், குஷ்புவுக்கு எதிராக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட நிர்வாகிகள், கடும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுமியா மணி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ராகுல் தலைமையை, நீங்கள் விரும்பவில்லை என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால் தான், பா.ஜ.,வில் குஷ்பு இணைய இருக்கிறார் என்ற, செய்தி பரவியது போலும்.
'இனியும் தாமதிக்காமல், பா.ஜ.,வில் சேர்ந்து விடுங்கள்' என, கூறியுள்ளார். காங்கிரஸ் மனித உரிமை பிரிவு துணை தலைவராக இருந்த தாஸ் பாண்டியன், பா.ஜ.,வில் இணைந்து, தற்போது, மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து, குழப்பத்தை ஏற்படுத்துகிறார். குஷ்புவும், இளைஞர் காங்கிரசாரால் விமர்சிக்கப்பட்டுள்ளார். உழைப்பவர்களை, காங்கிரஸ் கைவிட்டு விடும். எனவே, தன் உழைப்பு வீணாகாமல் இருக்க, பா.ஜ.,வில் இணைந்தால், குஷ்புக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதேபோல, வேறு சில பா.ஜ., தலைவர்களும், நடிகை குஷ்பு, பா.ஜ.,வில் இணைய வேண்டும் என, அழைப்பு விடுத்து உள்ளனர்.

No comments:
Post a Comment