பாஜக மாவட்டத் தலைவரின் உறவினரை முஸ்லிம்கள் அடக்கம் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்து வரும் த மு மு க விற்கு எச்சரிக்கை.
நேற்று (18.07.2020) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு கருணாநிதி என்பவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்து போனார், மேற்படி கருணாநிதி அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அவருடைய குடும்பத்தார் சுகாதார துறைக்கு ரூபாய் 22,000 பணம் கொடுத்துள்ளனர்,
ஆனால் பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு இளங்கோ அவர்களின் உறவினரை முஸ்லிம்கள் அடக்கம் செய்ததாக சன் டிவியிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது,
இறந்துபோன கருணாநிதி அவர்கள் திமுகவை சேர்ந்தவர், திரு இளங்கோ அவர்களுக்கு உறவினர் என்கிற போதிலும் அவர் வேறு கட்சியை சேர்ந்த நபர்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் கொரொனோ நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு யார் இறந்து போனாலும் தமுமுக என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்துக் கொண்டு நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று கூறி இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்து ஏமாற்றி வருகின்றனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு இளங்கோ அவர்களின் உறவினரை முஸ்லிம்கள் அடக்கம் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேற்படி கருணாநிதி குடும்பத்தினரிடம் பல ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அவர்களின் உடலை அடக்கம் செய்துள்ளனர்,
மேலும் அந்த ஆம்புலன்ஸ் தமுமுக அமைப்பை சேர்ந்த ஆம்புலன்ஸ் என்று எழுதப்பட்டிருந்ததே தவிர அந்த உடலை அடக்கம் செய்தவர்கள் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மனித நேயத்துடன் அடக்கம் செய்வதாக கூறிக்கொண்டு அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்வதோடு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்,
கொரோனா பாதுகாப்பு கவச உடைக்கு கூட தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
மேற்படி இறந்துபோன கருணாநிதிக்கு அனைத்து கட்சியிலும் உறவினர்கள் உள்ளனர், இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவரின் உறவினர் என்று கூறுவது உள்நோக்கம் கொண்டது,
பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் மனிதநேயத்துடன் முஸ்லிம்கள் சேவை செய்வதாக பொய் பிரச்சாரம் செய்து மதக்கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றனர்.
மேற்படி நபர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், தமிழக அரசும் தலையிட்டு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் தஞ்சை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொய் செய்தி வெளியிட்ட சன் டிவி உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட வேண்டும், இல்லை எனில் சன் டிவி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும்
மேலும் சமூக வலைதளங்களில் இந்த பொய் செய்தியைப் பரப்புவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது விளக்க பதிவு அல்ல, எச்சரிக்கை பதிவு ! இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சன் டிவி உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் இல்லையெனில் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment