திமுக மகளரணியில் பொறுப்பில் இருந்த பால்மலர் திமுக ஆட்சிக்காலமான 2008 ல் கொலை செய்யப்பட்டார்... கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட சென்றவர் திரும்ப பிணமாக தான் வந்தார்...
August 4 2013 தான் கடைசியாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பேசினார்...
திமுக பெண் பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கொலை வழக்கை போலீஸார் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற பால்மலர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கே.கே.நகர் பகுதி மகளிர் அணி செயலாளராக இருந்தவர் பால்மலர் (28). இவருக்கு குமாரவேல் என்ற கணவரும் யோகேஸ்வரன் (ப்ளஸ் ஒன் படித்து வருகிறார்) என்ற மகனும், நிவேதா (பத்தாம் வகுப்பு) என்ற மகளும் உள்ளனர்.
திமுகவில் அடிமட்ட தொண்டராக வாழ்க்கையை தொடங்கிய பால்மலர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் எந்நேரமும் போனில் பேசும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தாராம்.
திமுக கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்றார். ஸ்டாலினுடன் பால்மலர் நெருக்கமாக இருப்பது கட்சியில் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லை. அதன்பின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டைக்குள் மணிமங்கலம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.
காஞ்சிபுர மாவட்டம் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் குமாரவேலை அழைத்து உடலை காண்பித்த போலீசாரிடம் கொலுசு, சேலை ஆகியவற்றை வைத்து தனது மனைவி பால்மலர்தான் என உறுதி செய்தார். அதன்பின் வழக்கு விசாரணையில் பால்மலர் எதற்காக கொலைசெய்யப்பட்டார் என்றே தெரியவில்லை..
இது அன்று வந்த பத்திரிக்கை செய்தி
இதில் திமுக கவுனசிலர் தனசேகரன் என்பவனை தான் அந்த கணவர் குற்றம்சாட்டினார்...
இந்த கொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை...
திமுகவில் பெண்களை கொலை செய்வது பாலியல் பலாத்காரம் செய்வதெல்லாம் சர்வசாதாரணம்...
இதற்கும் நீதிகிடைக்க வேண்டும்...
No comments:
Post a Comment