திரு. ரங்கராஜ் பாண்டே ஒரு அற்புதமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது ஹிந்து சமய அறநிலைத் துறை என்று ஒன்று இருக்கிறது. ஹிந்து கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை அது எடுத்துக் கொள்கிறது. அப்படி இருக்கும் போது அந்தக் கோவிலில் குடியிருக்கும் கடவுளுக்கு ஒரு இழிவு ஏற்பட்டால் அதை அந்தத் துறை கண்டித்து நடவடிக்கை எடுக்காதா?
கோவில்களின் வருமானம் மட்டும் வேண்டும். அந்த தெய்வங்களை இழிவு படுத்தினால், அந்தக் கோவிலில் பணத்தைக் கொட்டும் ஹிந்துக்களை அவமதித்தால், அந்தத் துறைக்குக் கவலை இல்லையா? கண்டிக்கும் கடமை இல்லையா?
இங்கு இருக்கும் வக்கீல்கள் யாராவது இதைப் பற்றி விவாதித்தால் தேவலை. ஹிந்துக்கள் ஏன் ஹிந்து அறநிலையத் துறையிடம் புகார் கொடுக்கக் கூடாது? அவர்களை நடவடிக்கை எடுக்க செய்ய முடியாதா? அவர்கள் எடுக்கவில்லை என்றால் கோர்ட் மூலமாக எடுக்க வைக்க முடியாதா?
No comments:
Post a Comment