Wednesday, July 22, 2020

பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி திருமதி. அமுதா.

அவர்
▶️ மதுரையில் பிறந்தவர்
▶️கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தவர்
▶️13 ஆவது வயதிலேயே இமயமலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்
▶️கபடி விளையாட்டில் 3 முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்
▶️கராத்தேவிலும் திறன் மிக்கவர்
▶️மதுரை வேளாண்மைக் கல்லூரியில் படித்தவர்
▶️1979-1982 இல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அனைத்து 15 பதக்கங்களையும் வென்றவர்
▶️1992 இல் ஐபிஎஸ் தேர்வில் வென்றவர்
▶️1994 ஐஏஎஸ் தேர்வில் மாநிலத்தில் முதலிடம், தேசிய அளவில் முதல் பெண் என்ற சிறப்பிடம் பிடித்தவர்
▶️கடலூரில் சப்-கலெக்டர்
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், தர்மபுரியில் கலெக்டராக பணியாற்றியவர்
▶️தமிகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையராக பணியாற்றியவர்
▶️ஐ.நா. சபை திட்டத்தில் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றியவர்
▶️உணவு பாதுகாப்பு முதன்மைச் செயலாளராக இப்போது பணியாற்றி வருபவர்.
▶️சத்தியமங்கலம் பன்னாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் அளவு பக்தியுணர்வு கொண்டவர்
▶️செங்கல்பட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க துணிச்சலாக களமிறங்கியவர் மணல் லாரியால் இடித்து தள்ளிய போதும் அஞ்சாமல் செயல்பட்டு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியவர்
▶️கல்வியில் பின்தங்கியிருந்த தர்மபுரி மாவட்டத்தை அதில் மேம்படுத்தியவர்.
▶️குழந்தை திருமணம், பெண் சிசுக் கொலை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர்
▶️2015 சென்னை வெள்ளத்தில் பாதிக்கப் பட்டோரை மீட்கும் அதிகாரிகள் குழுவில் சிறப்பு அதிகாரியாக திறம்பட பணியாற்றியவர்.
▶️அதைத் தொடர்ந்து சென்னையின் ஏரி,குளம் மற்றும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் தீவிரமாக பணியாற்றியவர்
▶️பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்புக்காக முதல்வர் ஜெயலலிதாவால் லண்டனுக்கு அனுப்பி வைக்கப் பட்டவர்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட
திருமதி. அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Image may contain: 4 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...