திருச்சி கொரோனா பரிசோதனையில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் வழங்கியதாலும் விதி முறையை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாலும் திருச்சி உறையூரில் செயல்படும் “டாக்டர் டயக்னோஸ்டிக் செண்டர்” என்கிற பரிசோதனை மையம் மூடப்பட்டது..
இந்த கொரானா சோதனையை தனியாரும் செய்யலாம் என அனுமதி இந்த செனடருக்கு தந்த பின் இது இரண்டாவது முறையாக மூடப்படுகிறது..
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே காரணத்தால் சீல் வைக்கப்பட்ட சென்டர் மறுபடி அனுமதி பெற்று திறந்து இன்று மறுபடி சீல் வைக்கப்பட்டது..
குறிப்பாக இந்த லேப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் பாசிட்டிவ் என முடிவு கூறி சில ஆஸ்பத்திரிகளுக்கு அட்மிஷன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறாக பாசிட்டிவ் என கூறி குறிப்பிட்ட சில ஆஸ்பத்திரிகளுடன் சேர்ந்து கோடிகணக்கில் டாக்டர்ஸ் டயக்கோஸ்டிக் சென்டர் வசூல் செய்து வந்துள்ளது
என்னங்க இவன் கிட்ட டெஸ்ட்க்கு போறவங்க எல்லாத்துக்குமே பாசிட்டிவ் ரிப்போர்டடா தர்றான்..நோய் இருந்தால் தானே பாசிட்டிவ் ரிப்போரட் தரனும்..
இது புதுசும் அல்ல இவர்களுக்கு...
இதே போல 2017 ல் இங்கு டெங்கு பரிசோதனைக்கு பல மருத்துவர்களும் இங்கு பரிந்துரைத்ததால் கூட்டம் அள்ளியது..டெங்கு இல்லை சாதரண பரிசோதனை என்றால் 100 அல்லது 200 தான் கிடைக்கும்...பார்த்தான் இந்த யோக்கியன்.. அள்ளி விடு என வருபவர் அனைவருக்கும் சாதரண காய்ச்சலாக இருந்தாலும் டெங்கு பரிசோதனை மேற்கொண்டதாக கூறி 2500 ரூ வசூலில் இறங்கினான்...(அப்போது அரசு இலவசமாக வழங்கும் டெங்கு ஆய்வுக்கான கிட் ரூ 140 க்கே கிடைத்தது என்பது தனி..)
அதிகம் பேரிடம் இல்லை..சும்மா 300 முதல் 400 பேரிடம்...இவர்களுக்கு டெங்கு இருப்பதாக சர்ட்டிபிக்கெட்..அதாவது இல்லாத டெங்கு இருப்பதாக கூறி...
சந்தேகத்தின் பேரில் அப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டு கலெக்டர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கபட்டு அப்போதே நடவடிக்கை எடுத்தனர்..
அன்று டெங்கு..இன்று கொரோனா.அவ்வளவு தான் வித்தியாசம்...
இது தொடர்கதையாக இந்த “டாக்டர் டயக்னோஸ்டிக் செண்டர்” மீது அடிக்கடி மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது..
இந்த லேப்பின் லைசென்சை ரத்து செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்..
மாவட்ட நிர்வாகமே,
ஓன்று, சரியாக பரிசோதனை முடிவுகளை தரும்படி கடுமையாக உத்தரவு போடுங்க..
அல்லது மக்களின் உயிருடன் விளையாடும் இந்த சென்டரை நிரந்தரமாக முழுவதும் மூடிருங்க..
இந்த செனட்ர் மீது குற்றசாட்டு வருவதும் அவன் “ஏதோ “ செய்து சரிகட்டி மறுபடி திறப்பதும் சரியாக படவில்லை...
இது மளிகை கடையோ பேன்சி ஸ்டோரோ இல்லை..என்ன வேணா செய்யலாம் பணம் மட்டுமே பிரதானம் என போவதற்க்கு..
சரியான முடிவை எடுங்க...
பெரிய அளவில் பொது மக்கள் பாதிப்பதற்க்கு முன்பு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டும்..
No comments:
Post a Comment