*தூத்துக்குடியை சேர்ந்த பணி நிறைவு பேராசிரியர் (பெண்மணி - நாடார்) அனுப்பிய பதிவு*
நாடார்களை திராவிட இயக்கம் தான் வளர்த்ததா?
திராவிடம் இல்லையென்றால் பொன் ராதா கிருஷ் ணன் போன்றோர் பனைமரம் தான் ஏறியிருக்க வேண்டும் என்று உளறி இருக்கிறார் ஸ்டாலின்.
அவர் பொன்னாரை சொல்லவில்லை மாறாக அவரை மையப்படுத்தி நாடார் இனத்தை பற்றி சொல்லி இருக்கிறார்..
திமுகவில் இருக்கும் நாடார் மக்களே.. இது உங்களின் சுய மரியாதையை கேலி செய்வது ஆகும். யாரும் வளர்த்து விட வேண் டிய நிலையில் என்றும் நாடார் சமுதாயம் இருந்ததில்லை என்பதை நாடார் சமுதாயத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும்.
இவனெல்லாம் தலைவன், த்தூ, எந்த வரலாறு இந்த மூதேவிக்கு தெரிகிறது ? சுதந்திர தினம், குடியரசு தினம், தேசியகீதம் இதில் எதுவும் இந்த அப்ரண்டிஸ் தலைவருக்கு தெரியாது. அதனால் தான் நாடார்களை திராவிட இயக்கம் தூக்கிவிட்டது என்று நா கூசாமல் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் தெரியுமா? அது எப்பொழுது உருவானது தெரியுமா? அதை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா?. இப்பொழுது தான் அது தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க். 1921 ல் தூத்துக்குடி சண்முகவேல் நாடார் இந்த வங்கியை தன்னுடைய மக்களுக்காக உருவாக்கும்போது அதனுடைய பெயர் நாடார் வங்கி லிமிடெட் என்றே இருந்தது.. அப்பொழுது உங்களுடைய திராவிடம் எங்கிருந் தது?
ஏண்டா கோமாளி ...நீயும் உங்கப்பனும் பிறப்பதற்க்கு முன்பே ஒரு சாதி தனக்கென ஒரு பேங்கையே உரு வாக்கி வைத்திருந்த வரலாறு தெரியாமல் நாடார்கள் திராவிடம் இல்லை என்றால் பனை ஏறித்தான் வாழ வேண்டும் என்று பேசுவது எவ்வளவு ஆணவ மானது. கடைசியில் அந்த பேங்கையே உங்க குடும்பம் ஆட்டைய போட்டதே.. இது தாண்டா நீ சொல்லும் திராவிடத்தின் சாதனை..
அய்யநாடார் தெரியுமா? இன்றைக்கு இந்தியாவில் குட்டி ஜப்பான் என்று சொல்லப்படுகிற சிவகாசியில் மழை தண்ணீர் இல்லாமல் விவசாயம் நலிவடைந்து வந்த காலத்தில் யாரையும் எதிர்பார்த்து காத்து இருக்காமல்1922 ம் ஆண்டில் கல்கத்தா சென்று அங்கே 8 மாதம் தங்கியிருந்து தீப்பெட்டி தொழில் கற்று வந்தார். 1923 ல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையை துவங்கி வானம் பார்த்து ஏமாந்து நின்ற விவசாய மக்களுக்கு மாற்று தொழில் கொடுத்து வாழ்வளித்து, அடுத்து பட்டாசு தொழில் துவங்கி இன்று சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற கந்தக பூமியை காசு புரளும் பூமியாக மாற்றியவர்கள் அய்ய நாடாரும் அவரது சகோதரர் சண்முகவேல் நாடாரும் தான்.
அப்பொழுது எந்த திராவிடம் அங்கு இருந்தது? திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் சொந்த உழைப்பினால் முன்னேறிய ஒரு சமுதாயத்தை பார்த்து திராவிடம் தூக்கி விட்டது என்று எவனோ எழுதி கொடுத்ததை வைத்து பேசும் தற்குறி ஸ்டாலினே.
நாகர்கோவில் மார்ஷல் நேசமணி தெரியுமா?
எந்த திராவிடம் இல்லை என்றால் பொன் ராதா கிரு ஷ்ணன் போன்றோர் பனையேறித்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று சொன்னீர்களோ அந்த பொன்னார் பிறந்த நாகர்கோயில் மண்ணில் பிறந்த நேச மணி நாடார் உங்கள் திராவிடம் உருவாகும் முன்பே 1921 ல் வக்கீலாகி நீதிமன்றத்தில் நிலவிய சாதி பாகு பாடுகளை ஒழிக்க போராடியவர். அப்பொழுது நீங்கள் சொல்லும் திராவிடம் எங்கிருந்தது? இந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்கிற பெயர் சங்கரலிங்க நாடாரின் உயிர் தியாகத்தினால் உருவானது என்று மறந்து விடாதே. உங்கப்பா மாதிரி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாடகம் கிடையாது. மாறாக சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டி சோறு தண்ணீர் அருந்தாமல் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டவர்.. இவரை திராவிடமா வளர்த்தது?
மணிமுத்தாறு அணை தெரியுமா?
முல்லை பெரியாறு அணையை கட்ட தன்னுடைய சொத்தை விற்று கட்டிய வெள்ளைக்காரன் பென்னி குக்கைத்தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இந்தியாவில் ஒரு சாதி மக்கள் தங்களுடைய பணத்தை அளித்து ஒரு அணையையே கட்டி இருக்கிறார்கள் தெரியுமா? மணிமுத்தாறு அணையை கட்ட கே டி கோசல்ராம் நாடார் தங்களுடைய மக்களிடம் பணம் வசூல் செய்து அரசாங்கத்திடம் கொடுத்தபொழுது அவரின் பின்னால் திராவிடமா நின்றது?
தோள் சீலை போராட்டம் தெரியுமா?
நல்லா கேட்டுக்கோ.. உங்க பெரியாரும் திராவிட இயக்கமும் உருவாகும் முன்பே 1822 ல் நீ சொல்கிற பனையேறி நாடார்கள் தங்கள் பெண்களுக்கு மாராப்பு போடும் உரிமையை பெற திருவிதாங்கூர் அரசாங்கத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற வரலாறு தெரியுமா?
இந்த தோள் சீலை போராட்டத்தை நாடார்கள் அவர்கள் பெண்களுக்காக மட்டும் போராட வில்லை. ஒடுக்கப் பட்ட 18 சாதி மக்களுடைய பெண்கள் மாராப்பு அணிய பனையேறி நாடார்கள் தலைமை தாங்கி நடத்திய போராட்டம். திராவிட இயக்கம் உருவாதற்கு முன்பே தங்களின் சுயமரியாதைக்கு போராடிய ஒரு இனத்தை திராவிட இயக்கம் தான் வளர்த்தது என்று சொல்வது நாடார் இனத்திற்கே அவமானம்.
திராவிட இயக்க வரலாறு தெரியுமா?
சரிப்பா..நீ திராவிடம் என்று சொல்கிறாயே. அந்த இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியை உருவாக்க முன் நின்ற பட்டிவீரன் பட்டி சவுந்திரபாண்டிய நாடாரை தெரியுமா? அவர் என்ன அப்பொழுது பனைமரமா ஏறிக்கொண்டு இருந்தார்?உங்களுடைய திராவிட இயக்கத்தின் வரலாறே உனக்கு தெரியலையே மூதேவி.
தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி தெரியுமா?
இன்றைக்கும் தமிழக மக்கள் நினைவில் இருக்கும் ஒரே ஆட்சி காமராஜர் ஆட்சி தான். பனையேறி சாதியில் பிறந்து வளர்ந்த காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்கு எந்த திராவிடம் துணை நின்றது?அந்த பொற்கால ஆட்சியை பொய் சொல்லி வீழ்த்தியதுதான் உங்கள் திராவிடம் செய்த ஒரே சாதனை.
திராவிட இயக்கங்கள் துணைஇன்றியே தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்த தினத்தந்தி, மாலைமுரசு நாளிதழ்களை உருவாக்கிய சி பா ஆதித்தனார் எந்த பனை மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தார்? உங்களை மாதிரி உண்டியல் குலுக்கி பத்திரிக்கை நடத்த வில்லை. சொந்த பணத்தை வைத்து தமிழ்நாட்டில் பத்திரிக்கை தொடங்கி தமிழ் வளர்த்தார்,
எல்லா சாதியிலும் வறியவர், வசதியானவர் என்று பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றது. ஏன் இன்றும் சில ஊர்களில் நாடார்கள் பனைஏறி கொ ண்டுதான் இருக்கிறார்கள், அது அவர்களின் தொழில். உங்களை மாதிரி திருடாமல் உழைத்து வாழ்கிறார்கள் இது கேவலமா உங்களுக்கு?
அண்ணா உருவாக்கிய கட்சியை அவர் மறைந்த பிறகு உங்க குடும்பம் கைப்பற்றி தமிழ் நாட்டை கொள்ளையடித்து வாழ்ந்து வருகிறதே இதற்கு காரணம் நீங்கள் சொல்லும் திராவிடம் தான் திராவிடத்தால் வயிறு வளர்த்தது நீங்கள் தானே தவிர நாடார்கள் அல்ல.. இந்த திராவிடம் இல்லை என்றால் உங்கள் குடும்பம் முழுவதும் திருக்குவளை கோயில்களில் மேளம் வாசித்துக் கொண்டு கடவுளுக்கு அளிக்கப்படும் பிரசாதத்தை வாங்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாடும் உருப்பட்டு இருக்கும்.
No comments:
Post a Comment