திமுக ஐடி விங் மாநில செயலாளரும், எம்.எல்.ஏவுமான பி.டி.பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஐடிவிங்கை கவனிக்கும் ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில்," தமிழகத்தில் வேறு எந்தக் குடும்பத்திற்கும் குறையாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இறைப் பணிகளை ஆற்றி இருக்கிறோம்.
என்னை வளர்த்த முன்னோர்கள் அறிவுறுத்தலின்படி மக்களுக்கு நல்லது செய்வதுதான் ஆன்மீகத்தின் முக்கிய அடையாளம். என்றைக்கும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்ற வாழ்க்கை முறையை நான் பின்பற்றுகிறேன்.
எந்த ஒரு செயலில் நியாயத்தையும் விளைவுகளால் தான் கணக்கிட்டு அறியமுடியும் நாங்கள் செய்து வரும் நல்ல செயல்களின் விளைவாக தான் பல நூற்றாண்டுகளாக பல தலைமுறைகளாக பெரும் செல்வத்துடன் நல்ல பெயருடனும் வாழ்ந்து வருவதே இறைவனிடம் கிடைத்த வரம்.
அது இன்றைக்கும் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்புகிறேன்.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருப்பணி செய்யும் போது என் தாத்தாவுக்கு வாழ்த்து சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னபடி என் தாத்தாவும் என் அப்பாவும் ஆன்மீக இலக்குகளை எனக்கு வகுத்துத் தந்துள்ளார்கள்.
என் தந்தை பெயர் பழனிவேல் என் இரு மகன்களின் பெயர்கள் பழனி மற்றும் வேல். இந்த பெயர்களுக்கு ஏற்ப எங்கள் ஆன்மீகப் பணிகள் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு ஆண்டுதோறும் பழனியில் எங்கள் மண்டகப்படியில் தான் இறைவன் முருகன் எழுந்தருளும் மரபு இன்றும் தொடர்கிறது. மேலும் பல பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு மேல் ராக்கால பூஜை எங்கள் குடும்பத்தின் சார்பாக தொடர்ந்து நடத்தியும் வருகிறோம்.
சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு இல்லாத வகையில் சுயமரியாதையுடன் வாழ தக்க ஒரு வாழ்க்கை அன்னை மீனாட்சியின் அருளால் எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு இல்லாத வகையில் சுயமரியாதையுடன் வாழ தக்க ஒரு வாழ்க்கை அன்னை மீனாட்சியின் அருளால் எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு;இதை எப்படி எடுத்துக்கொள்வது?உண்மையான கடவுள் நம்பிக்கையாளனாகவா?அல்லது கொளரவத்திற்காக இவர்கள் குடும்பம் செய்வதாகவா?
உண்மையான கடவுள் நம்பிக்கையாளனால் எப்படி தன் கடவுளை, நம்பிக்கையை கொச்சைபடுத்துபவனை கண்டு இரத்தம்கொதிக்காமல் இருக்க முடிகிறது?ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் அவனோடு பயணிக்க முடிகிறது?எதனால்..?எம்.எல்.ஏ.பதவிக்காகவா.?பணத்திற்காகவா.?இது என்ன கடவுள் நம்பிக்கை..?என்ன மனிதர்கள் இவர்கள்..?
No comments:
Post a Comment