ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வாகியுள்ள, 61 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், தி.மு.க., உட்பட சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள், டில்லிக்கு வருவதை தவிர்த்துவிட்டதால், புதிய, எம்.பி.,க் களாக, 45 பேர் மட்டுமே பதவியேற்றனர்.
ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சி, தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.இ னியும் தாமதம் வேண்டாமென, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முடிவெடுத்ததை அடுத்து, நேற்று, எம்.பி.,க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சி, தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.இ னியும் தாமதம் வேண்டாமென, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முடிவெடுத்ததை அடுத்து, நேற்று, எம்.பி.,க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்வான, 61 எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 45 பேர் மட்டுமே பதவியேற்க வருவதாக உறுதிஅளித்தனர். இதையடுத்து, வரலாற்றிலேயே முதன்முறையாக, கூட்டத்தொடர் நடைபெறாத நாளான நேற்று காலை, 11:00 மணிக்கு, ராஜ்யசபாவின் கதவுகள் திறக்கப்பட்டன.புதிய, எம்.பி.,க்கள், ஒவ்வொருவராக, உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு, போதுமான இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.
பின், அகர வரிசைப்படி, மாநில வாரியாக அழைக்கப்பட்டு, புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்றுக் கொண்டனர். பா.ஜ.,விலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா உட்பட, 19 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரசிலிருந்து மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட சிலர், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.,காங்., தேசியவாத காங்., பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலிருந்து சிலர் என, மொத்தம், 45 பேருக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களில், 36 பேர் புதுமுகங்கள்.
பின், புதிய, எம்.பி.,க் கள் மத்தியில், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ''புதிய, எம்.பி.,க்கள், சபை அலுவல்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். ''சபை நடைபெறும் நாட்களில் பார்லிமென்டிலும், மற்ற நாட்களில் மக்களுடனும் இருக்க வேண்டும். சபை நடவடிக்கைகள் குறித்து மூத்த, எம்.பி.,க்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்றதும், அனைவரிடமும் சென்று, கைகுலுக்கி வாழ்த்து பெறுவது முந்தைய வழக்கம். ஆனால், கொரோனா பரவலால், முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருந்த பலரும், கைகுலுக்கிக் கொள்வதை தவிர்த்து, வெறுமனே வணக்கங்களை மட்டும் பரிமாறிக் கொண்டனர்.
ஓடி வந்த அ.தி.மு.க.,'ஆடி'ப் போன தி.மு.க.,
தமிழகத்திலிருந்து கே.பி.முனுசாமி, தம்பித்துரை, வாசன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், தி.மு.க., - எம்.பி.,க்கள், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மூவரும் வரவில்லை. இது குறித்து விசாரித்தபோது, 'கொரோனா பரவல் உள்ள நிலையில், தங்குமிடம் மற்றும் உணவுப் பிரச்னை உள்ளன.'தவிர, இது ஆடி மாதம். பதவி ஏற்பது உசித மல்ல. எப்படியும் செப்டம்பருக்குள் பார்லிமென்ட் கூடும். அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று இருந்து விட்டனர்' என, தகவல்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment