மதுரையில் பாலி எத்லின் அண்ட் பாலி புரபலின், பி.வி.சி., உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வரும் 47 வயது வர்த்தகர் ரூ.21 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்த தகவலின் பேரில், அவரை மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரகம் கைது செய்த நிலையில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இவர் ரூ.11.85 கோடிக்கு தமிழக அளவில் 23 நிறுவனங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்ததாக போலி ரசீது தயாரித்துள்ளார். இதே போல் விற்பனை செய்த பொருட்களுக்கு ரூ.10.05 கோடி ஜி.எஸ்.டி., கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட இவர் தன்னிடம் இருந்த ரூ.1.77 கோடியை உடனடியாக ஜி.எஸ்.டி., வரியாக கட்டினார். மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். 2021 ஜன., 4 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மதுரை மத்திய ஜி.எஸ்.டி.,கமிஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment