இவர் போன்றோருக்கு இன்றைய தமிழக அரசியலில் இடமும் இல்லை, மதிப்பும் இல்லை.
எனக்கு விவரம் தெரிந்து இரண்டு முறை பெரிய பலம்பொருந்திய கூட்டணிகள் உருவாக மூல காரணமாக இருந்திருக்கிறார்.
அவை வெற்றிபெற்று இருந்தால் தமிழகத்தின் தலையெழுத்து என்றோ மாறியிருக்கும்.
2014ல் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேஜகூவை உருவாக்கிய காரணகர்த்தா(அதுவும் பாமகவையும்,தேமுதிகவையும் ஒரே அணியில் உட்காரவைத்தது அவரின் தன்னலமற்ற நோக்காத்தினால் தான்)
2015ல் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியை உருவாக்கியவர்.
இப்போதும் ரஜினியால் ஒரு தாக்கத்தை உருவாக்க முயன்றவர்.
எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாமல், பதவியும் இல்லாமல்,பணமும் இல்லாமல் , மற்றவர்களை ஒன்றிணைத்து வேலை செய்ய வைப்பது உண்மையில் சாதாரண மனிதனுக்கு இயலாத ஒன்று.
அவருடைய சுயநலம் இல்லாத உயர்ந்த நோக்கம் அதை சாதித்தது.
திராவிட கட்சிகளை அழித்து, -பண்பில் உயர்ந்த, நாகரிகம் செழித்த,ஊழலின் நிழல் கூட அண்டாத- அந்த பழைய அரசியலை திரும்ப கொண்டுவர அவர் செய்த முயற்சிகள் பகீரதன் செய்ததற்கு கொஞ்சமும் குறைவில்லாதது.
ஒரு தகுதியும் இல்லாத,இழிபிறவிகள் பெரியகருப்பணும்,ஜெயக்குமார்,ராசா ராணிகளும் இங்கு மீண்டும் மீண்டும் வெல்லும்போது ,தமிழருவிக்கு இங்கே இடமில்லை.
உங்கள் முயற்சிகள் பலிக்காமல் போனது பெரும்பாலான தமிழர்களின் முட்டாள்தனத்தால் தானே அன்றி உங்கள் மீது ஒரு பிழையும் இல்லை, உங்கள் கடமையை கீதை வழியில் நின்று குறையின்றி செய்தீர்கள்.
உங்கள் பணியை தொடர இன்னொருவர் வருவார் அல்லது இந்நேரம் வந்திருப்பார்.
உங்கள் கண்முன், நீங்கள் வாழும் காலத்திலேயே இந்த திருட்டு திராவிட கூட்டம் அழிவதை பார்ப்பீர்கள்.
ஓய்வெடுங்கள் மணியன் அவர்களே..!
உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு தேசியவாதி மூலமாக தொடரும்.
விதை போட்ட உங்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment