Wednesday, December 30, 2020

யாராலும் மறந்துவிட முடியாது.

 இசை ரசிகர்களாகிய நாம் எத்தனையோ பழைய வருடங்களை கடந்து புதிய வருடங்களை வரவேற்று இருக்கிறோம் ஆனால் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாழாய்ப்போன 2020 ஆம் ஆண்டை நாம் மறக்கப் போவதில்லை இசை உலகம் இருக்கும் வரை தமிழ் பாடலை விரும்பும் வரை ஏன் உலகளவில் இசையை விரும்பும் வரை கண்டிப்பாக இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாத ஒரு துயரமான ஆண்டாக நாம் நினைவில் நின்று கொண்டே இருக்கும் ஏனென்றால் இந்த இசை உலக மாமன்னன் ஜாம்பவான் எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாடுவதை நிறுத்திக்கொண்ட ஆண்டு இசை உலகம் இருண்ட ஆண்டு இந்த ஆண்டு

😭😭😭😭
இந்த ஆண்டை நாம் நடைப்பிணமாக வேண்டுமானால் கடந்து விடலாம் ஆனால் நாம் நினைவுகளையும் நாம் இதயங்களையும் இங்கே இறக்கி வைத்துவிட்டு தான் கடந்து செல்கிறோம் என்பது மட்டும் உண்மை😭😭😭😭
2020 ஆம் ஆண்டில் பல பிரபலங்களை பறிகொடுத்து மீளாத் துயரில் ஆழ்ந்தது தமிழ் சினிமா உலகம்😭😭😭😭
2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே இந்த 2020ஆம் ஆண்டு பெரும் சோகமான ஆண்டாக அமைந்தது.😭😭😭😭
பாடகர் எஸ்பிபி ஒட்டு மொத்த இசைப்பிரியர்களையும் 2020ஆம் ஆண்டில் உலுக்கிய மரணம் பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மரணம். லேசான கொரோனா அறிகுறியுடன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா நெகட்டிவான நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திடீரென தனது 74 வயதில் காலமானார்.....😭😭😭😭😭

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...