Wednesday, December 23, 2020

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுக்கணும்னு நினைச்சாங்க பாரு அந்த மனசு தான் சார் கடவுள்...❤️

 சூப்பர் ஸ்டார் என்றால் தமிழ்நாடு மட்டும் அல்ல, இந்தியாவில் தெரியாத ஆட்களே இருக்க முடியாது,

❤️
ஸ்டாலின் அவர்களை தெரியாதவர்கள் கூட கருணாநிதி மகன் என்றால் எல்லோருக்கும் தெரியும்,❤️
ஆனால் இந்த சிலுவம்பாளையத்து கிராமத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி என்பவர் அப்படி ஒரு மாபெரும் பின்னணி இல்லாதவர், சிலுவம்பாளையத்தில் கருப்பகவுண்டருக்கு பிறந்த எளிய விவசாயி. அவரை அடையாள படுத்தி சொல்ல அம்மா விட்டு சென்ற ஆட்சியே சாட்சி.
எம்.ஜி.ஆர் ஏழைகளுக்காக வாழ்ந்தார், எம்.ஜி.ஆர் சந்தித்த அதே ஏழ்மையை முதல்வர் எடப்பாடியாரும் சிறுவயதில் பட்டிருக்கிறார் எனவே அந்த கஷ்டம் பார்த்து வளர்ந்ததன் விளைவு, தன் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டுகிறார்.
அம்மாவின் அமைச்சரவையில் இருந்து, எப்படி நிர்வாக முடிவு எடுப்பது, மக்கள் நல திட்டங்களை விரிவு படுத்துவது எப்படி, எதிர்க்கட்சிகளை சட்டமன்றத்தில் சூறையாடுவது எப்படி அனைத்தும் அவர் அருகில் இருந்து பாடம் படித்தவர்.
மக்களுக்கு ஒரு நாளும் துரோகம் இழைத்ததில்லை. அவரை முன்னிலைப்படுத்த மக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
எத்தனை சவால்கள், எத்தனை மிரட்டல்கள், எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்கள், 22 க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல் சாவல்கள், தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை முடங்கியது, கடும் வெள்ளம், கொரோனா பேரிடர், மக்கள் நல திட்டம், இதை அனைத்தும் மக்கள் சக்தி ஒன்றையே ஊக்கமருத்தாய் கொண்டு ஆட்சி புரிகிறார்.
மக்கள் சக்தி ஒன்றையே நம்பி, களம் காணும் இந்த விவசாயிக்கு கிடைக்கும் வெற்றி, பாமர மக்களின் வெற்றியாக தான் அமையும்.❣️❣️❣️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...