மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்
“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்வேன், இரவு பகலாக செய்வேன்.
கணிதம் என்னில் ஊற்றெடுக்கின்றது, ஆனால் வறுமையும் பசியும் அதை அடைக்கின்றன”, கண் கலங்கினான் அந்த அதிகாரி
அவன் என்ன கலங்குவது? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.
அந்த அதிகாரி வடிவில் தெய்வம் உதவியது, ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார் அந்த நல்லவன்.
காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.
நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.
சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.
படிக்க லாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”
உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன் அவன் . முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல் அவன்.
அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.
அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.
5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது
ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.
அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், அது அன்று மூட நம்பிக்கை என்றாலும் கொரோனா காலம் அதற்கான விடையினை கொடுத்தது.
மொத்தத்தில் விதி சரியாக வேலை செய்தது. நோய் தீரமறுத்து மல்லுகட்டியது.
லண்டனின் குளிர் ராமானுஜனுக்கு சரிவரவில்லை அது காசநோயினை உண்டாக்கியது, ராமானுஜன் அசைவம் எடுத்திருந்தால் வாழ்ந்திருக்கலாம், ஆனால் கடைசிவரை இந்திய கலாச்சாரத்தில் நின்ற அவன், ஒரு உயிரை கொன்று வாழ்வது எங்கள் தர்மம் அல்ல என மறுத்து நின்றான்
வலுகட்டாயமாக வற்புறுத்தபட்டபொழுது அதை நான் தொட்டால் பின் என் தெய்வ அனுகிரகம் போய்விடும், பின் வாழ்ந்து என்ன பயன் என மறுதலித்து நின்றான் ராமானுஜம்
தன் உச்சபுகழிலும் அதை தொடர நினைக்காமல் தன் கலாசார அடையாளத்தை, பாரத தாத்பரியத்தை காத்து நின்றான் ராமானுஜன்.
நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,
32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை.
ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.
ஆம் ஐன்ஸ்டீனுக்கு வான்வெளி கோள்கள் சுற்றுபாதைக்கும் அணுவின் இயக்கத்துக்குமான பொதுவிதி ஒன்று புரிந்தது
ஆனால் அதற்கான சூத்திரத்தை உருவாக்க அவனால் முடியவில்லை, ஒருவேளை ராமானுஜம் இருந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பான்.
இன்று ராமானுஜம் பிறந்த நாள்
அவன் பிறந்த ஈரோட்டில் அவனுக்கோர் நினைவிடமில்லை, ஆனால் ராம்சாமி என்பவர் அவ்வூரின் அடையாளமனார்
அவன் வளர்ந்த காஞ்சியில் அவனுக்கோர் அடையாளமில்லை, காஞ்சிபுரம் அண்ணாதுரை பெயரில் ஊரெல்லாம் சாலை, பஸ் நிலையம், கழிவறை இன்னபிற அழிச்சாட்டியங்கள்.
அவன் வாடி வாடி ஓடி ஓடி கணிதம் படித்து போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை.காலகொடுமையின் கண்ணீர் சாட்சிகள் இவை, ஒரு இனம் எவ்வளவு கொடுமையாய் அறிவு கெட்டு நிற்கின்றது என்பதற்கான அடையாளம் இவை
பிராமணன் எனும் ஒரே காரணத்துகாக உலகம் கொண்டாடிய ஒரு விஞ்ஞானி எப்படி தமிழகத்தில் மறைக்கபட்டான் எனும் மகா அசிங்கமான அரசியல் இது.
தமிழ்க திருட்டு திராவிடம் அவனை மறைக்கலாம், அனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல வேதம்.
பிராமணர் என்பதால் பலர் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை.
அண்ணாவிற்கும், ராம்சாமிக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?
கிடையாது.
உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது, அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் பேச கூடாது.
கணிதத்தில் சுயம்பாக அவர் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்த சாதனை உலகம் எக்காலமும் வியக்கும் ஒன்று.
உலகை புரட்டி போட்ட கனித மேதைக்கு மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை மாறாக மத்திய அரசு அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.
இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டுகொண்டிருக்கின்றது
ஆண்ட்ராய்டு போன் காலத்தில் அவரின் பல தியரிபடியே கருவிகளும் இயங்குகின்றன
இந்த நவீன உலகினை உருவாக்கிய விஞ்ஞானிகள் வரிசையில் ராமானுஜத்திற்கும் நிச்சயம் பங்கு உண்டு. அதில் அவர் உழைப்பும் அடங்கி இருக்கின்றது
கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் பிறந்த நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்.
அவன் இன்னொருமுறை பிறந்துவர அந்த நாமகிரிதாயார் அருள்புரியட்டும்
இன்று அவனின் பிறந்த நாள் எல்லா பொறியியல் கல்லூரிகள், கணிதவியல் மையங்களில் பெரும் கொண்ட்டாட்டத்தோடு கொண்டாடபட்டிருக்க வேண்டும்
ஆனால் கொண்டாட யாருமில்லை, அதை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.
ஐ.ஐ.டி போன்ற விஞ்ஞான பீடங்களில் ராமானுஜன் வாசகர் வட்டம்தான் இருக்க வேண்டும், அங்கு ராம்சாமி மன்றம், அம்பேத்கர் வாசகர் வட்டம் சதுரமெல்லாம் இருப்பது என்ன கொடுமையோ தெரியவில்லை.
தமிழகத்தில் ஊரெல்லாம் அண்ணாவுக்கும் ராம்சாமிக்கும் சிலை உண்டு, ஆனால் ராமானுஜம் பெயரில் ஒரு செங்கல் கூட கிடையாது
இப்படி ஒரு மானக்கேடும், முட்டாள்தனமும், மடமையும் உலகில் எந்த நாட்டிலும் கிடையாது
நடிகர்களை கொண்டாட பழக்கபடுத்தபட்டிருக்கும் முட்டாள் தமிழ் சமூகத்துக்கு ஒரு அறிவார்ந்த தமிழனை நினைக்கமுடியாதபடி அதன் மூளை மழுங்கபடிக்கட்டிருகின்றது.
பகுத்தறிவு பேசி பிராமணரை விரட்டி நாத்திகம் பேசி இங்கு என்னவெல்லாமோ சொல்லி ஆட்சியினை பிடித்த கூட்டம் ராமானுஜத்தின் நகம் அளவு ஒரு மேதையினை உருவாக்கிற்றா என்றால் இல்லை
அவர்களின் மாபெரும் அவமானமும் கேவலமும் அது, ஆனால் அதையெல்லாம் மறைப்பார்கள், அதுபற்றி பேசமாட்டார்கள்
இந்திய நிலை இப்படி இருக்க உலகின் அறிவார்ந்த கணிதவியலாளர் மன்றம் அந்த அறிவாளி தமிழனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது
இந்தியரின் கணித அறிவினை தமிழனாக ஆரியபட்டா, பாஸ்கராவுக்கு பின் அகில உலகில் நிரூபித்தவன் அந்த பெருமகன்
அவன் வாழ்ந்தது முப்பத்திரண்டு ஆண்டுகள்தான், ஆனால் பல யுகங்களுக்கான சாதனையினை செய்துவிட்டு சென்றவன் அவன்..
அவன் விட்டுசென்றிருக்கும் கணித புதிர்களுக்கு அவன் வந்துதான் விடையளிப்பான் என காத்து கொண்டிருகின்றது கணித உலகம்
கவிக்கோர் காளிதாசன், ஓசைபாடலுக்கோர் ஒரு ஒட்ட கூத்தன், உணர்ச்சிக்கோர் பாரதி, கணிததுக்கோர் ராமானுஜம் என காளி உருவாக்கிய பொம்மை அவன்
அவனை வைத்து அவள் வழங்கிய விஞ்ஞான அருள் கொஞ்சமல்ல. 1920ல் இறக்கும் தருவாயில் கூட மார்க் தீட்டா என்ற கணிதத்தை கண்டு பிடித்தார். ஒரே வழியில் அவர் விடை கண்டு பிடித்தது எப்படி என்பதை நாம் கண்டு பிடிக்கவே 82 ஆண்டுகளில் ஆகியுள்ளது. ஆம், 2012ல்தான் ராமானுஜன் கண்டுபிடித்த மார்க் தீட்டா வுக்கு வழி வகைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். ராமானுஜன் கணித முறையான கிரிப்டாலாஜி தான் இன்று பல்வேறு அறிவியில் தொழில்நுட்பங்களில் பயன்பட்டு வருகிறது. ராமானுஜன் கண்டுபிடிக்கவில்லையென்றால் இந்த உலகம் இப்போது இப்படி இயங்கிக் கொண்டிருக்க முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக் குறிதான்.
இவரது "சாதனை களை " பாடப்புத்தகங்களில், முதல் வகுப்பிலிருந்து, 12ம்வகுப்புவரை, தொகுத்து வழங்கவேண்டும். அரசாங்கம் செய்யுமா?
இன்னும் பல ஆண்டுகள் கழித்து விஞ்ஞானத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மீண்டும் அவன் வர கூடும், நாமகிரி தாயாரின் முகத்தின் சிரிப்பு அதைத்தான் சொல்கின்றது.
No comments:
Post a Comment