சமூகவலைதளமான டுவிட்டரில் 'உதை_வாங்கிய_உதயநிதி' என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அரியலூர் சென்றார். அங்கு, திருமானுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மூப்பனாரின் பார்லிமெண்ட் நிதியில் கட்டப்பட்டிருந்த அரங்க மேடையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதயநிதிக்காக மேடையை அலங்கரித்தபோது, அரங்க மேடையில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட த.மா.கா.,வினர் ஆத்திரமடைந்தனர்.
இந்நிலையில், அரியலுாரில் பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி மதியம் 2 மணியளவில் திருமானுாருக்கு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி சாலையில் அவரது வாகனத்தை மறித்த த.மா.கா.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆவேசமாக உதயநிதி வந்த வேனை நோக்கி முற்றுகையிட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சிதம்பரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றார் உதயநிதி. அவர் பேச ஆரம்பித்த சற்றுநேரத்தில் அங்கிருந்த கூட்டத்தினர் பாதிபேர் கலைந்து சென்றதாக தெரிகிறது. மேலும் அந்தக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கைகுலுக்கி கொண்டிருந்தபோது ஒருவர் முகத்தில் பேப்பரை தூக்கி எறிந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதனால் போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு கிளம்புவது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது.
இந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் இந்த சம்பவங்களை எல்லாம் சுட்டிக்காட்டி 'உதை_வாங்கிய_உதயநிதி' என்ற ஹேஷ்டாக்கை பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர். ''உதய்னா பேரு வச்சதுக்கு இப்படி உத வாங்கிட்டே இருக்கியே, எவ்வளவு வாங்கிருக்கேன், இத சொல்லி ஓட்டு கேட்டுடோம்னா இரக்கப்பட்டு என்னைய சிஎம்., ஆக்கிடுவாங்க'' போன்ற நகைச்சுவையான கருத்துக்களும், மீம்ஸ்களும், டிரோல்களும் பகிரப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment