கொஞ்சம் யோசிப்போம்
தேவைகளையும் தேவயானதையும் வேண்டி
கடவுளிடம் செல்கிறோம்
சிலருக்கு மனக்கஷ்டம்
சிலருக்கு பணக் கஷ்டம்
எல்லா பிரச்சனையும் ஒரே நாள்ல தீரனும்னா
எப்படிங்க முடியும்??
நம்ம கஷ்டத்திலும் யாருக்காவது எதாவது
செஞ்சிருக்கோமோ??
அதாவது
என்ன செய்தமோ அதன் பலனைதான் அடைவோம்
அது எதுவானாலும் சரி
கடவுள் நம்ம எதுமே கொடுக்கல எதையுமே தரலனு
யோசிக்கிறோம்
சரி
எங்க எதுல மிச்சம் வைச்சிருக்கோம் எங்க
தவறு செஞ்சிருக்கோம்?
கடவுள் சொன்ன எதாவது ஒன்றை நிவர்த்தி
செய்துள்ளோமோ??
இத
எதாவது ஒன்ன யோசிச்சிருப்பீங்களா??
கோயிலுக்கு மசூதிக்கு ஆலயத்துக்கு போறோம்
இருக்குறவன் ஊர சுத்துறான்
இல்லாதவன் கோயில சுத்துறான்
மித மிஞ்சி இருக்குறவன் கார்ல சுத்துறான்
கோயிலுக்கு செல்கிறோம்
அங்கே
இயலாதவர்கள் கோவிலுக்கு அருகிலில்தான்
அமர்ந்து பிச்சை எடுக்கிறார்கள்
கிழிந்த உடையோடு உண்ண ஒரு நல்ல பாத்திரம் இல்லாமல் கூட
ஒன்னுமே இல்லாதவங்களுக்கு இரக்கம் காட்டத
கடவுள் நமக்கு என்ன நம்முடைய தேவைகளை
எப்படி பூர்த்தி செய்வார்??
கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்கு
நாம் கொடுக்கும் 50 100 ரூபாய்க்கே நம்மை
கையெடுத்து கும்பிட்டு நல்லாருக்கனும்னு சொல்றாங்க
ஒன்னு தெரிஞ்சிக்கோங்க
சக மனிதனின் தேவைகளை சிறிதோ பெரிதோ
எப்போது நாம் பூர்த்தி செய்கிறோமோ
அன்றுதான் கடவுள் நம் பக்கம் கண் திறந்து பார்ப்பார்
பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்து உங்களால்
வயிறார உண்ண முடியுமா??
நம்மால் பண உதவிகளை தான் செய்யவேண்டும்
என்ற அவசியமில்லை
உணவு ஆடை தண்ணீர் அழகிய பேச்சு இயன்றதை செய்யுங்கள்
அதன்பின்
உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது
என்று பாருங்கள்
சக மனிதர்களை கஷ்டப் படுபவர்களுக்கு
உதவுங்கள்...!
No comments:
Post a Comment