Friday, December 25, 2020

பலருக்கு இந்த வரலாறு தெரிந்திருக்காது .

 இருபதாண்டுகளுக்கு முன்பு #ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் நடிகர்கள் அனைவரும் #காவிரிபிரச்சினையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அப்போது நடிகர் சங்க தலைவராக #விஜயகாந்த் இருந்தார். ஜெயலலிதாவின் மறைமுக ஏற்பாட்டின் பேரில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் (கேபிஎன் என்று நினைக்கிறேன்) ஏற்பாடு செய்த பேருந்துகளில் எல்லாரும் கிளம்பி நெய்வேலி சென்றார்கள். நெய்வேலி சென்று கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டிய மின்சாரத்தை தடை செய் என்று கோஷம் போடுவது ஆர்ப்பாட்டத்தின் முக்கிய அஜெண்டா. போராட்டத்துக்கு தலைமை ஏற்றது #பாரதிராஜா.
அப்போது பாரதிராஜாவுக்கும் நடிகர் ரஜினிகாந்த்க்கும் இடையே சிறு பிணக்கு இருந்தது. ஏற்கனவே பெப்சி பிரச்சினையில் ரஜினிகாந்த் மீது பாரதிராஜா, கேபி போன்றோர் கடுப்பில் இருந்தார்கள். பாரதிராஜா #திமுக மீது கடுப்பில் இருந்தார். அந்த கடுப்பை பயன்படுத்திக்கொண்டே ஜெயலலிதா பாரதிராஜாவை போராட்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்.
நெய்வேலி போராட்டத்தில் நடிகர் #ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. நெய்வேலிதான் போக வேண்டுமா? சென்னையில் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றார். ஆனால் பாரதிராஜா ஒத்துக்கொள்ளவில்லை. நெய்வேலி சென்றால் வாட்டாள் நாகராஜின் கடும்கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அவர் நினைத்திருக்கலாம். ரஜினி தவிர எல்லா நடிகர்களும் நெய்வேலி சென்றார்கள். அப்போது #சன்டிவிதான் அந்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததாக (நினைவு சரியென்றால் மாலன்தான் அதை நேரலை ஒளிப்பரப்பு செய்தார் என்று நினைக்கிறேன்) நினைவு.
நெய்வேலியில் மேடையில் ஏறி பேசியவர்களில் சிலர் மது அருந்தியிருந்தார்கள் என்பது அவர்கள் உடல்மொழியிலேயே தெரிந்தது. குறிப்பாக #மன்சூரலிகான் மேடையேறி மைக்கில் எல்லாரையும் ஆபாசமாக திட்ட மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தார்கள்.
பிறகு மேடையேறிய #டி_ராஜேந்தர் நாமெல்லாம் தமிழ் உணர்வில் இவ்வளவு தூரம் பேருந்தில் பயணித்து இங்கே வந்துள்ளோம். சிலர் #ஹனிமூன் போறமாதிரி தனிக்காரில் ஜோடியாக வருகிறார்கள் என்று சொல்ல கேமராக்கள் கமலை நோக்கி திரும்பின. அப்போது கமலுக்கும், சிம்ரனுக்கும் இடையே இருந்த உறவை பற்றி பத்திரிக்கைகள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்தன. கமலும், சிம்ரனும் பேருந்தில் வரவில்லை. தனியாக ஒரு காரில் பயணித்து நெய்வேலி சென்றிருந்தார்கள்.
அந்த போராட்டத்தில் நடிகர் ரஜினி மட்டும் கலந்துக்கொள்ளவில்லை.
பிறகு அந்த போராட்டம் முடிந்ததும் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அந்த போராட்டத்தில் நடிகர்சங்கம் கலந்துக்கொள்ளாது என்று நடிகர்சங்கம் அறிவித்தது. ரஜினியின் போராட்டத்தை குறுக்குசால் ஓட்டும் செயல் என்று பாரதிராஜா கடுமையாக விமர்சித்தார். ரஜினி வழி தனிவழி என்று இன்னொரு பேட்டியில் விஜயகாந்த் சொன்னார். அப்போது விஜயகாந்த் பக்கத்தில் நின்ற நடிகர் குண்டுகல்யாணம் (அவர் ஜெ அபிமானி) போன்றோர் அதை கிண்டல் செய்து கைகொட்டி சிரித்தார்கள்.
ஆனால் பிழைக்கத்தெரிந்த நடிகர்களில் பெரும்பாலோனோர் ரஜினி மனம் புண்படும் என்று அந்த போராட்டத்துக்கும் சென்றார்கள். பாரதிராஜா, விஜயகாந்த் கலந்துக்கொள்ளவில்லை.
நடிகர் கமல் அந்த போராட்டத்திலும் கலந்துக்கொண்டார். ரஜினியை சந்தித்து திரும்பும் வழியில் கமலை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். எனது நண்பர் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு எனது
வாழ்த்துகள்
என்று கமல் சொல்லிவிட்டு கமுக்கமாக காரில் ஏறிச்சென்றார். கமல் அப்போதெல்லாம் அரசியல் போராளியாக இல்லை. அவரது ஆர்வம் வேறு விஷயங்களில் இருந்தது. இந்த போராட்டம் நடக்கும்போதே கர்நாடகாவில் நடந்த போராட்டத்தில் ரமேஷ் அரவிந்த் போன்றோர் கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாமே வரலாற்றில் ஆவணப் படுத்தபட்டுள்ளன. இதை எல்லாம் இங்கே எழுதவேண்டிய தேவை இப்போதிருக்கும் #பேஸ்புக்_தலைமுறை பலருக்கு இந்த வரலாறு தெரிந்திருக்காது அவர்களுக்காகத்தான்.
#கமலும்_சிம்ரனும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...