தமிழகத்தில், பொங்கல் பரிசாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், ரேஷனில் வழங்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தன் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில், முக்கிய அறிவிப்பாக, நேற்று இதை வெளியிட்டார்.
மேலும், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமான துண்டு கரும்புக்கு பதிலாக, இந்த முறை முழு கரும்பு வழங்கப்படும் என்றும், ஜன., 4 முதல், ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்றும், முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment