கமல்ஹாசன் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர், அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ உரிமையானது இருக்கின்றது என சமீபத்தில் பேட்டியளித்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு அவர்கள் தெரிவித்துள்ளார்
திமுகவில் இருந்து காங்கிரஸ் அதன் பின் காங்கிரஸிலிருந்து பாஜக என கட்சி மாறியுள்ள குஷ்பு அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அவ்நேரத்தில் வேளாண் மசோதா பற்றி குஷ்புவுக்கு சரியான புரிதல் இல்லை எனவும் டெல்லியில் போராடும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தவர்கள் எனவும், டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் கமல்ஹாசன் கூறியதாக செய்தியாளர்கள் கூறி இது குறித்து தங்களுடைய கருத்து என்ன? என கேள்வி கேட்டுள்ளார்கள்.
அதற்கு பதில் அளித்துள்ள நடிகை குஷ்பு அவர்கள் "கமல் சார் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ முழு உரிமை உள்ளது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் கமல் கூற அவருக்கு உரிமை உண்டு" என கூறியுள்ளார்.
குஷ்புவின் இவ் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment