Saturday, December 26, 2020

இட்லி புளிச்சாலும் விரும்பி சாப்பிடுற உங்கிட்ட.......

 *ஒரு ஹாஸ்டல்ல, தினமும் காலை உணவாக, உப்புமா போட்டாங்களாம்.*

100 பேர்ல, 80 பேர்,
*"இதை மாத்தணும், வேற வேணும்"னு வார்டன்கிட்ட கம்ளெயிண்ட் பண்ணுனாங்களாம்...*
ஆனால் 20 பேர்
*"இதான் பிடிக்குது, இதான் தினமும் வேணும்"னு* முட்டுக் கொடுத்தாங்களாம்...
ஆனால் 80 பேர் மாற்றம் வேணும்ங்கறாங்க....
வார்டன் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்த முடிவு செஞ்சார்.
*அந்த 20 பேர், உப்புமாவுக்கே ஓட்டு போட்டாங்க.....*
மத்த 80 பேர், அவங்களுக்குள்ள ஒண்ணா முடிவெடுக்கல... அவங்களுக்கு, பிடிச்சதுன்னு ஓட்டு போட்டாங்க...
-18 பேர் தோசை
-16 பேர் இட்லி
-14 பேர் பொங்கல்
-12 பேர் பிரட் பட்டர்
-10 பேர் ஊததப்பம்
-10 பேர் பூரி
என்ன ஆச்சுனா,...
இன்னிக்கும், அந்த ஹாஸ்டல்ல, உப்புமா தான் காலை உணவு....
..
..
..
..
*காரணம், ஜனநாயகப்படி, மெஜாரிட்டி, "உப்புமா" தானாம்....*
*இந்தகதைக்கும், இந்திய அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோவ்....*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...