*வாகனங்களில் front bumper இருந்தால் போக்குவரத்து & காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள்.*
*front bumper இருந்தால் என்ன பாதிப்பு உள்ளதா.?*
*ஆமாம் நம் உயிருக்கே பாதிப்பு உள்ளது.*
பல லட்சம் மதிப்புள்ள காரின் முன்பாகம் எங்கேயாவது இடித்து சேதமடைந்து விடாமல் இருக்க பம்பர் மாட்டுகிறோம், ஆனால் விலைமதிப்பில்லாத நம் உயிரை பற்றி சிந்தனையில்லாமல் இருக்கிறோம்.
புதிய மாடல் வாகனங்கள் இப்போ சந்தைக்கு வருகிறது. சில காலங்களில் பழைய வாகனங்கள் காணாமல் போய்விடும்.
ஓட்டுனரின் முன்பு இருபக்கத்திலும் *"Airbag"* இருக்கும், காரின் முன்பக்கம் எங்கேயாவது இடிப்பட்டு விபத்தாகும் பட்சத்தில் அந்த ஏர்பேக் ஆட்டோமெட்டிக்காக ஓப்பன் ஆகி நம் முகத்தில் எந்த காயமும் படாமல் காக்கும்.
இந்த ஏர்பேக் சிஸ்டம் வேலை செய்வதற்காக காரின் முன் பக்கத்தில் இரு சைடுகளிலும் சென்சர் மாட்டியிருக்கும், அந்த சென்சரில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக அழுத்தம் ஆனால் உடனே காரின் உள்ளபக்கம் ஓட்டுனரின் இருபக்கத்திலும் ஏர்பேக் ஓப்பன் ஆகிவிடும்.
நாம் காரின் பெயின்ட் போக கூடாது, காரின் ரேடியேட்டர் அடிப்படகூடாது என front bumper பொருத்தி விடுகிறோம். இப்போது என்ன நடக்கும்.?
ஏதாவது விபத்து ஏற்படும் போது பம்பர் இருப்பதால் காரின் ரேடியேட்டரை அடிபடாமல் இருக்கும், அதே நேரத்தில் ஏர்பேக்கின் சென்சார் போதிய அழுத்தம் கிடைக்காமல் முன்பக்க ஏர்பேக் வேலை செய்யாது.
கார் இடித்த வேகத்தில் நாம் முன்பக்கம் சாயும் போதும், கண்ணாடியில் மோதி மூக்கு, மண்டை அடிப்பட்டு சில நேரங்களில் உயிரழப்பும் நேரிடும்.
ஆகவே தான் வாகன சட்டப்படி போக்குவரத்து & காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள்.
*அரபு நாடுகளில் போலிஸ் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்திலும், பம்பரை காண இயலாது. மீறி இருந்தால், அது போக்குவரத்து குற்றமாக அங்கு கருதபடும்.*
*ஆகையால் front bumper அகற்றவும்! உங்கள் முகத்தையும், உயிரையும் பாதுகாக்கவும்!*
பொது நலன் கருதி...!!
No comments:
Post a Comment