Sunday, December 27, 2020

வாழ்த்துக்கள்....(Or) வாழ்த்துகள் எது சரி..?

 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..(உ-ம்:-செலவு என்பதில் உகார எழுத்து 'வு' க்குப்பிறகு செலவு(க்)கள் என்று 'க்' என்னும் ஒற்றெழுத்து வராது..?

செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்றே எழுத வேண்டும்
3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
வாக்கு – வாக்குகள் (வாக்குக்கள் அன்று)
கணக்கு – கணக்குகள்
நாக்கு – நாக்குகள்
அடுப்பு - அடுப்புகள்
வாத்து- வாத்துகள்
அதுபோன்றே,
வாழ்த்து – "
வாழ்த்துகள்
" என்றே சொல்லவேண்டும்...
வாழ்த்துக்கள்
என்று 'க்'போட்டு எழுதுவது தவறு
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.
தோப்புக்கள் என்று 'க்' போட்டால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்
அதே போல
வாழ்த்துக்கள்
என்று 'க்' போட்டு அழுத்தி சொன்னால்,
அருமையான
கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
வாழ்த்துகள்
என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...