Tuesday, December 22, 2020

*கனம் ‘food court ‘நீதிபதி அவர்களே,*

 இன்று எனது கட்சிக்காரர் மார்கழி மாதத்தின் முடி சூடா மன்னன் வெண் பொங்கலின் சார்பாக வாதாட ஆஜர் ஆகி உள்ளேன்!

சாப்பிட்ட பின் தூக்கம்தான் வரும், வயிற்றை அடைத்து விடும், வேலை பார்ப்பது கஷ்டம், இப்படி எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் என் கட்சிக்காரர் மேல்! Silly!
அவர்களுக்கு ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொங்கல் சாப்பிட என்று ஒரு வாழ்வாங்கு வந்த முறை இருக்கிறது.
கனம் கோர்ட்டார் அவர்கள் முன் அதை விளக்க அனுமதிக்க வேண்டுகிறேன்!
அதைக் கேட்ட உடன் இது இன்னொரு ரஃபேல் கேசாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!
ஆவி பறக்கும் வெண் பொங்கலைப் ப்ளேட்டில் சாப்பிடுவது எந்திரன் 2.0வை கேமேரா ப்ரிண்டில் பார்ப்பதற்கு ஒப்பனாது. வாழை இலையே உகந்தது!இலையில் போடும்போது அதன் பதம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம்! கொள கொள வென்று ஓடினாலோ அல்லது பாறாங்கல்லைப் போல உட்கார்ந்தாலோ rejected! இரண்டுக்கும் இடைப்பட்ட கன்ஸிஸ்டன்சி மிக முக்கியம்.
பொங்கல் என்றாலே ஜோடி முக்கியம். ஆக.... வடை இல்லாப் பொங்கல் வெண் பொங்கல் அல்ல... அது வீண் பொங்கல்! வடையானது வெளிப்பக்கம் மொறு மொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருத்தல் விவசாயக் கடன் தள்ளுபடி ஆட்சிக்கு வர எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்!
தேங்காய் சட்னி, சாம்பார், காரச் சட்னி லட்சியம். முதலில் சொன்ன இரண்டும் அவசியம்! இவற்றைக் கப்பில் வைத்துச் சாப்பிடும் சின்னப் பையன்கள் ஓரமாகக் கூப்பேயில் உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனிக்கவும். வாளியுடன் சாப்பிடுபவர்களுக்கே ப்ளேயிங் லெவனில் இடமுண்டு!
ஆவி பறக்கும் பொங்கலின் ஓரத்தில் கொஞ்சம் ஸ்பூனால் எடுத்து குற்றால அருவியில் குளிக்கத் தலையை நீட்டும் முன் கையை நீட்டி டெஸ்ட் செய்வது போல் முதலில் சாம்பாரில் லேசாக நனைக்கவும், பின் தேங்காய் சட்னியில் கொஞ்சம் ... நாக்கின் நுனியில் வையுங்கள்... வாயையும் கண்களையும் ஒரு செகண்ட் மூடுங்கள். அது கடிக்கத் தேவையில்லாமல் கரைந்து தொண்டை வழியாக ஓடியே போயிருக்கும். அடுத்த காம்பினேஷன் காரச் சட்னி ப்ளஸ் சாம்பார்...! சட்னி சாம்பாருடன் அத்தனை வகை காபினேஷனுடனும் ட்ரை செய்து ஒரு நாலைந்து வாய் சாப்பிட்டு அதில் இருக்கும் மிளகு டேஸ்ட், அவ்வப்போது மாட்டும் வறுத்த முந்திரி இவற்றை ரசித்து விட்டு வடைக்குக் கவனத்தைத் திருப்புங்கள!
வடையை விண்டு சாம்பாரில் புஷ்கர முக்கு கொடுங்கள்!அதன் பிறகு அப்படியே தூக்கி தேங்காய் சட்னியில் ஒரு நனையல்... வாயில் போட்ட உடனே மொறு மொறுப்பு கடிக்கும் போது தெரியும் அளவிற்கே நனைக்க வேண்டும். Detailing is very important!
மூன்று ஸ்பூன் பொங்கலுக்கு ஒரு ஒரு ஸ்பூன் வடை இந்த ratio maintain செய்யுங்கள்!
இரண்டு நிமிங்களில் ப்ளேட் காலி!
ஆனால் ஆட்டம் முடியவில்லை!
விராட் கோலி மாதிரி சூடான ஃபில்டர் காஃபி!படு ஸ்ட்ராங்க்! சக்கரைக் குறைவாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆற்று ஆற்றி வாயில் ஊற்றி டேஸ்டை உள் நாக்கு அனுபவிக்க விடுங்கள்!
இரண்டு நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி உட்கார்ந்திருங்கள்.
பொங்கல் ஒரு experience, your honor!
அதை உணராமல் ‘பொங்கல் பார்ட்டி, என்னை என்ன பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சியா? ‘இது போல அபத்த டயலாக்குகள் எனது கட்சிக்காரரை மிகவும் புண் படுத்துகின்றன!
மார்கழி மாதத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கி எங்கள் மார்கழி கிங்
கிற்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
That’s all your honour!
For all Pongal பிரியர்களுக்கு
🤤

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...