டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்குத் தெரியல, எதோ எனக்குத் தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க
புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும், பழைய தோத்த MPக வீட்ட காலி பண்ண நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிரக் குடுத்துப் பாடு பட போறவங்கள ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிக்கிங்ங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்யப் போறவங்களக் கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு, ஹோட்டல்ல காலி பண்ணுங்கன்னு கவர்மன்ட் சொன்னா, வீட்ல வாஸ்து சரி இல்ல, அத மாத்தனும், இத மாத்தனும்னு சொல்லிட்டு ஹோட்டல்லயே மாசக் கனக்குல டேரா போட்டிருவாங்க....இப்படி 2014 வந்த ஹோட்டல் பில் மட்டும் 30 கோடிக்கும் மேல.
இந்தத் தடவ கவர்மென்ட் ஒரு பயலுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் கெடயாது, இஷ்டம்னா பார்லிமென்ட் ஹாஸ்டல்ல தங்கிகுங்க, இல்லேனா எந்த ஸ்டேட்ல இருந்து ஜெய்ச்சு வர்ரீங்களோ அந்த ஸ்டேட் ஹவுஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டு சத்தம் இல்லாம இருக்கனும்னு சொல்லீடிச்சு...மக்கள் பணம் சும்மா ஒரு 50 கோடி மிச்சம்.
இதை எல்லாம் இங்க இருக்கற எந்த ஊடகமும் சொல்லாது, மத்தியில ஆட்சில இருக்கற கட்சிக்காரனும் சொல்லறது இல்ல... எப்படிய்யா மக்களுக்கு தெரியும்.
திருடர்களைத் துரத்தித் துரத்தி அடிப்பதில் இந்த கவர்மென்ட் கில்லாடி....
No comments:
Post a Comment