வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அது நல்லதல்ல என்று முன்னோர்கள் நம்பினார்கள்.
ஆனால் அது தவறு என்று கார்ப்பரேட் சைன்ஸ் கம்பெனிகள் நம்மை நம்ப வைத்தார்கள்.
அதன் விளைவு இப்போது நாம் பூனை குறுக்கே மட்டுமல்ல எப்படி வந்தாலும் கண்டுகொள்வதில்லை.
நம்மை இப்படி மாற்றிவிட்டு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா...?
மேலும் படியுங்கள்.
சீனாவை ரகசியமாக கண்காணிப்பதற்காக உளவு செயற்கைக்கோள்களை சீனாவின் மீது நிலைநிறுத்துவது அமெரிக்காவின் வழக்கம்.
சிலவருடங்களுக்கு முன்னர் அப்படி செய்த போது செயற்கைக் கோள்கள் ஒரு நிமிடம் செயலிழந்து ஸ்தம்பித்தன.
பலமுறை முயன்ற போதும் அப்படியே நிகழ்ந்தது. அதை சரி செய்யவே முடியவில்லை.
சரி அதன் கீழே சீனாவில் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ந்தார்கள்.
அங்கே அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே இருந்தது எந்த ஊரும் இல்லை. அது ஒரு பெரும் காடு.
அந்தக் காட்டின் நடுவே ஒரு கோயில் இருந்தது. மேலும் ஆய்வு செய்த போது அது சீனாவின் பிரசித்தி பெற்ற பூனைக் கோவில் என்று கண்டறிந்தார்கள்.
அந்த பூனைக்கோவிலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுதான் செயற்கைக் கோள்கைளை ஸ்தம்பிக்க வைத்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள்.
உடனே பூனைகளை வாங்கி நாசா ஆய்வகத்தில் வைத்து ஆராய தொடங்கினார்கள்.
பூனையின் வாலில் இருந்து பிரத்யேக மின்காந்த அலைகள் வெளியாவதை நாசாவின் அதிநவீன உபகரணங்கள் படம் பிடித்தன.
மனிதர்களை பார்க்கும் போது அந்த கதிர்களின் அலைநீளம் உடனே மாறியது.
குறிப்பாக பூனைகள் வாசலில் இருந்து குறுக்காக செல்லும் போது அபாயகரமான காமா கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர் விஞ்ஞானிகள்.
இந்த காமா கதிர்கள் மனிதனது சிந்தனையை குழைத்து ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை.
இதனாலேயே பூனை குறுக்கே வந்தால் போன காரியம் விளங்காது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்தனர்.
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
உண்மையான தமிழர்கள் அனைவரும் ஆச்சர்யமான இந்த உண்மையை அதிகம் பகிரவும்!
No comments:
Post a Comment