Saturday, April 3, 2021

" மௌனம்"

 #மௌனம்" என்கிற வார்த்தைக்கு எனக்கு தெரிந்து 19 #அர்த்தங்கள் உள்ளன.


1.பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின் "மௌனம்"  #சம்மதம்.


2.நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம்" #துன்பம்.


3.இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது "மௌனம்" #நம்பிக்கை.


4. நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில் மௌனம் #சித்ரவதை.


5.நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம் #பொறுமை.


6.நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் "மௌனம்" #அடக்கம்.


7.திருமணக்கோலத்தில்  உள்ள அமைதியின் போது "மௌனம்  #வெட்கம்.


8.தவறுதலாக தவறு செய்த போது மௌனம்  #பயம்.


9.ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம்  #எதிர்பார்ப்பு. 


10.கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம்  #ரத்தக்கொதிப்பு


11.இலக்கை அடைய நினைத்து ஒருமுகப்படுத்தும் போது மௌனம் #சக்தி.


12.தீவிரமாகப் போராடும் போது மௌனம் #வலிமை.


13. பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாத போது மௌனம்  #எதிர்ப்பு.


14. கல்யாணவீட்டினில் கால் இடறி விழுந்தபின் எழுந்து அமர்ந்திருக்கும் போது மௌனம் #அவமானம்.


15.நம்மை விட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும் போது மௌனம்  #துக்கம் ...!


16.நம் குடி கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது "மௌனம்  #ஆத்திரம்.


17. கற்ற வித்தையை கையாளும் போது மௌனம் #ஆனந்தம்.


18.அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் #உறக்கம்.


19. உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க.. உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க மௌனம் #மரணம்...!


தமிழ் உறவுகளுக்காக அன்புடன்.


உங்களுக்கு "மெளனம்" பற்றி இன்னும் தெரியும் என்றால் அதை பதிவு செய்யுங்கள்.


நன்றி மகிழ்ச்சியுடன்...


#வாழ்த்துக்கள்.


#வாழ்க_வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...